உங்களுக்கு பன்மடங்கு தனலாபம் கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்

perumal

இன்றைய காலத்தில் பணம் என்பது நம் அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாகும். அப்படியான பணத்தை நாம் என்ன தான் அக்கறையுடன் சேமித்தாலும், ஏதாவது ஒரு வகையில் செலவு ஏற்பட்டு விடுகிறது. அந்த செலவை ஈடுகட்ட விருப்பமில்லை என்றாலும் சமயங்களில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு, குடும்ப பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகிறது. வேண்டுவோர்களுக்கு செல்வத்தை அருள்பவர் ஸ்ரீனிவாசன். அவரை வழிபட துதிக்க வேண்டிய “ஸ்ரீனிவாச ஸ்லோகம்” இதோ.

Perumal

ஸ்ரீனிவாச ஸ்லோகம்

ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே

திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நன்மைகளைத் தரும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தீபமேற்றி, இனிப்பு நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

Perumal

- Advertisement -

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீனிவாசப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
பணம் அதிகம் சேர ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Srinivasa slokam in Tamil. It is also called as Perumal mantras in Tamil or Vishnu manthirangal in Tamil or Srinivasan manthiram in Tamil or Mahavishnu manthirangal in Tamil.