1 வருடமானாலும் இனி பாத்திரம் தேய்க்கும் ஸ்டீல் ஸ்க்ரப்பர் துருப்பிடிக்கவே பிடிக்காது. அறுபடாது. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

scrubber
- Advertisement -

பெரும்பாலும் இப்போது நிறைய வீடுகளில் பாத்திரம் தேய்ப்பதற்கு இந்த ஸ்டீல் ஸ்க்ரப்பர் தான் பயன்படுத்தப்படுகின்றது. விலை குறைவாக இந்த ஸ்டீல் ஸ்க்ரப்பரை வாங்கினாலும், வாங்கி பயன்படுத்த தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே இந்த ஸ்க்ரப்பர் துருப்பிடிக்க தொடங்கும். ஸ்க்ரப்பரில் இருக்கும் சின்ன சின்ன துகள்கள் அதாவது, சிறிய சிறிய கம்பி போல பாத்திரத்தின் இடுக்கில் மாட்டி அறுபட்டு பாத்திரத்தோடு இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வராமல் தடுக்க ஸ்டீல் ஸ்க்ரப்பரை வாங்கியவுடன் என்ன செய்து அதன் பின்பு பயன்படுத்தலாம் என்பதை பற்றிய குறிப்பையும், இதோடு சின்ன சின்ன வீட்டுக்கு தேவையான குறிப்புகளையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும்போது புதியதாக வாங்கிய ஸ்டீல் ஸ்க்ரப்பரை இந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று ஸ்கிரப்பரை ஒன்றாக கூட இதில் போட்டுக் கொள்ளலாம். 1 ஸ்பூன் அளவு ஷாம்பூ அல்லது பாத்திரம் தேய்க்கும் லிக்விடை இந்த தண்ணீரில் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஐந்து நிமிடம் போல கொதிக்க வையுங்கள். ஸ்டீல் ஸ்க்ரப்பர் அந்த தண்ணீரிலேயே அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். சூடு ஆறிய பின்பு சுடுதண்ணீரில் இருக்கும் ஸ்டீல் ஸ்க்ரப்பரை எடுத்துப் பார்த்தால் கையில் தொடும்போதே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். ஸ்டீல் ஸ்க்ரப்பர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இறுக்கமாக நமக்கு கிடைத்திருக்கும். இப்போது இந்த ஸ்க்ரப்பரை பாத்திரம் தேய்க்க பயன்படுத்துங்கள். வாங்கிய உடனே ஸ்டீல் ஸ்க்ரப்பரை பயன்படுத்துவதற்கும், இப்படி சுடு தண்ணீரில் போட்டு பின்பு பாத்திரம் தேய்க்க பயன்படுத்துவதற்கும் நிறையவே வித்தியாசம் தெரியும். நீண்ட நாட்களுக்கு ஸ்டீல் ஸ்க்ரப்பர் துருப்பிடிக்காமல் அறுபடாமல் உழைக்கும்.

நம்முடைய வீடுகளில் விசேஷ நாட்களில் சில சமயம் கூடுதலாக வெல்லம் வாங்கி வந்து விடுவோம். ஆனால் அந்த வெல்லத்தை சரியான முறையில் ஸ்டோர் செய்து வைக்கவில்லை என்றால் வெல்லத்தில் இருந்து லேசாக தண்ணீர் கசிய தொடங்கிவிடும். அப்படி இல்லை என்றால் வெல்லம் கெட்ட வாடை வீசத் தொடங்கிவிடும். வெல்லத்தை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பிரஷ்ஷாக ஸ்டோர் செய்வது எப்படி.

- Advertisement -

பெரிய கட்டியாக இருக்கக்கூடிய வெல்லத்தை முதலில் ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஸ்டோர் செய்ய டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டிஷ்யூ பேப்பருக்கு உள்ளே கொஞ்சம் வெல்லம் தான் வைக்க முடியும். நான்கிலிருந்து ஐந்து டிஷ்யூ பேப்பர்களை தனித்தனியாக எடுத்து அதன் உள்ளே சிறிதளவு வெல்லத்தை வைத்து அப்படியே மூடி தனித்தனி பொட்டலங்களாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு ஐந்திலிருந்து ஆறு டிஷ்யூ பேப்பரில் வெல்லத்தை பிரித்து போட்டு மடித்து வைத்து விட்டீர்கள். இதை அப்படியே ஒரு கவரில் உள்ளே ஸ்டோர் செய்து கவரை சுருட்டி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்து விட்டால் போதும். 6 மாதத்திலிருந்து 8 மாதம் கூட வெல்லம் புதிதாக வாங்கிய வெல்லம் போலவே பிரஷ்ஷாக இருக்கும். தேவைப்படும் போது ஒவ்வொரு டிஷ்யூ பேப்பரில் இருக்கும் வெள்ளத்தைக் கூட தனித்தனி பொட்டலங்களாக எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு மேலே சொன்ன இரண்டு குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா யூஸ்ஃபுல்லா இருக்கும்.

- Advertisement -