நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த ஒரு தவறை நிறுத்தினாலே போதும். பணக்கஷ்டம் ஏற்படாது.

thinking-cash

நாம் அன்றாடம் செய்யும் ஒரு தவறா? என்ன? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வந்திருக்கும். கண்டிப்பாக ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒரு விதத்தில் இந்த தவறை நாம் தினந்தோறும் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். அது என்ன தவறு என்பதைப் பற்றியும் அந்த தவறை திருத்திக் கொண்டு, நாம் நம் வீட்டில் செய்யக்கூடிய ஒரு சிறிய பரிகாரத்தை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Cook Apprentice

பெண்களாக இருந்தால் நாம் அன்றாடம் செய்யும் ஒரு தவறு சமைப்பதில் உள்ளது. சமைப்பதில் என்ன தவறு? நம் வீட்டில் சமைக்கும் சாப்பாட்டை அளவோடு சமைக்கின்றமா? என்றால் பலபேர் இல்லை என்றுதான் கூறுவார்கள். சாப்பாடு என்னது அன்னலட்சுமியை குறிக்கின்றது. அந்த அன்னலட்சுமியையை அளவோடு சமைக்காமல், தினம்தோறும் வீணாக்கினால் மகாலட்சுமி நம் வீட்டில் எப்படி தங்குவாள்? சாப்பாடு என்றால் சாப்பாடு மட்டுமல்ல. காய், குழம்பு எல்லாவற்றையும் தான் குறிக்கும். எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக சமைத்து சாப்பிடும் அளவை விட, கீழே கொட்டும் அளவு தான் இன்று அதிகமாக இருக்கின்றது. இந்த தவறை முதலில் பெண்கள் வீட்டில் செய்யக்கூடாது. சில பெண்கள் அளவோடு சமைக்கிறார்கள். அது நல்ல விஷயம்.

அடுத்ததாக ஆண்கள். ஆண்களில் சிலபேர் சமைப்பார்கள். ஆனால் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படும் சாப்பாடை அளவுக்கு அதிகமாக எடுத்து சென்று விட்டு அதை குப்பையில் கொட்டும் பழக்கத்தை மேற்கொள்ளக்கூடாது. இதில் சில பெண்களும் அடங்குவார்கள். ஹோட்டலுக்கு செல்லும் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தேவையான உணவுப் பொருட்களை மட்டும் அளவோடு சொல்லி சாப்பிடுவது நல்லது. தேவை இல்லாமல் அனைத்து உணவுப் பண்டங்களையும் வாங்கி வைத்து வீணாக்குவது மிகவும் தவறான ஒன்றுதான்.

rice

எவரொருவர் அன்னலட்சுமியை பரிபூரண மரியாதை கொடுத்து மதிக்கின்றாரோ அவர்களின் வீட்டில் நிச்சயம் மகாலட்சுமியும் தங்குவாள். அன்னலட்சுமி நம் வீட்டில் தங்கும் இடம் என்பது அரிசி மூட்டை அல்லது அரிசியை கொட்டி வைத்திருக்கும் பாத்திரம். அந்த இடத்தில் விரலி மஞ்சள் 2, 1 ரூபாய் சில்லரை நாணயம் 3, 5 ஏலக்காய் இவைகளை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அந்த அரிசியில் வைத்துவிடுங்கள். அரிசியை தோண்டி அதனுள் புதைத்து வைத்தாலும் சரி அதன் மேலேயே வைத்தாலும் சரி எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். இப்படி நாம் வைக்கப்பட்ட அந்த முட்டையின் உள் இருக்கும் விரலி மஞ்சள், ஏலக்காய், நாணயம் இவைகளை மாதத்திற்கு ஒரு முறை புதிதாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றிய பழைய மஞ்சள், ஏலக்காய், நாணயத்தை நீங்கள் எந்த நல்ல காரியத்திற்கும் வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம். இப்படி தொடர்ந்து செய்து வர அந்த அன்னலட்சுமியின் ஆசியோடு மகாலட்சுமியின் ஆசியையும் சேர்த்து பெரும் பாக்கியம் நமக்கு கிடைக்கும். இதனால் நம் வீட்டிற்கு பணம் வருவதற்கு ஏதாவது தடைகள் இருந்தாலும் அதை இந்த பரிகாரமானது நீக்கிவிடும். இப்படி நீங்கள் முதலில் உங்கள் அரிசி மூட்டையில் இந்த மூட்டையை வைப்பதற்கு பௌர்ணமி தினத்திலோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ தொடங்கலாம். நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம் உண்டு.

இதையும் படிக்கலாமே
குலதெய்வத்தை உங்கள் வீட்டிலேயே தங்க வைக்க ரகசிய வழி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam athigam vara Tamil. Panam athikarikka Tamil. If you waste you food in Tamil. Dont waste your food in Tamil.