மனைவியை காளியாக பார்த்த மகானை பற்றி தெரியுமா?

Kaali-and-saradha

ராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். அவருடைய மனைவி தான் சாரதா தேவி. ஒரு சமயம் சாராத தேவியிடம் சிலர் வந்து, உன் கணவருக்கு ஏதோ பைத்தியம் பிடித்து விட்டது. அவரை உடனடியாக சரி செய்ய முயற்சி செய் என்று கூறினார்கள். அப்போது சாரதா தேவிக்கோ வயது 18. அந்த சிறிய வயதில் அவருக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.

ramakrishna Paramahamsar

அவரும் ராமகிருஷ்ணரும் அப்போது வேறு வேறு இடத்தில் இருந்தனர். ஆகையால் உண்மை என்ன என்பதை நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்று எண்ணி கமார்புகூரிலிருந்து தட்சினேஸ்வரம் வரை சுமார் 38 கிலோமீட்டர் நடந்தே செண்டர். அங்கு சென்று பார்த்தால் பரமஹம்சர் ஒரு முழுமையான ஆன்மீகவாதியாக இருந்தார். சாரதா தேவியை புன்னகையோடு வரவேற்ற பரமஹம்சர், தேவி இனி நான் உன்னை என் மனைவியாக என்ன முடியாது. எனதன்னை காளி தேவியையே நான் உன்னிடத்தில் காண்கிறேன் என்றார்.

இதை கேட்ட சாரதா தேவி, என்னை நீங்கள் மனைவியாக ஏற்காவிட்டாலும் பரவா இல்லை சுவாமி ஆனால் உங்களுக்கு எப்போதும் பணிவிடை செய்து நான் காலத்தை கழிக்க விரும்புகிறேன். ஆகையால் என்னை நீங்கள் உங்கள் சீடர்களுள் ஒருவராக ஏற்க வேண்டுகிறேன் என்றார். பிரமஹம்சரும் அவரை தன் சீடராக ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு சாரதா தேவி, ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவராகவே வாழ்ந்து வந்தார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பல சீடர்கள் இருந்தனர். ஆனாலும் இவ்வுலகையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த ஒரு சீடர் இருந்தார் என்றால் அவர் தான் சுவாமி விவேகானந்தர். இவரின் அறிவாற்றலையும், கருத்து மிக்க பேச்சையும் கண்டு நாட்டின் மூலை முடுக்கில் இருந்த இளஞ்சர்கள் அனைவரும் எழுச்சி அடைந்தனர் என்றால் அது மிகையாகாது.

இதையும் படிக்கலாமே:
சிவனை அடைவது பற்றி அகோரி கூறிய விளக்கம் – வீடியோ

தமிழ் கதைகள், மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Over view:

Ramakrishna paramahamsar’s wife was Saradha dhevi. Ramakrishnar treated Saradhevi as Goddess Kali. He was the first person who treated wife as Kali.