கிரீன் சட்னி சேர்த்து இப்படி ஸ்டப்பிங் பிரட் பஜ்ஜி செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முழுவதுமாக சாப்பிட்டு விடுவார்கள்.

bread
- Advertisement -

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசனை எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். அவ்வாறு பஜ்ஜி, போண்டா, வடை என்று எப்பொழுதும் செய்யும் அதே உணவுகளை செய்து கொடுத்தால் அவர்களுக்கு சற்று சலிப்பாக தான் இருக்கும். ஆனால் இவற்றையும் செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு குழந்தைகள் ஆரோக்கியமானதாக சாப்பிடுவதற்கு இப்படி புதினா, கொத்தமல்லி சேர்த்து கிரீன் சட்னி செய்து அதனை ஸ்டஃப்பிங் செய்து, அதில் பிரட் பஜ்ஜி செய்து கொடுத்துப் பாருங்கள். ஒன்று, இரண்டு கொடுத்தாலும் பத்தாது இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ஸ்டஃபிங் பிரட் பசியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரெட் – 4 ஸ்லைஸ், கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், ஆப்ப சோடா- ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் – 2, மல்லித்தழை – சிறிது, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

பச்சை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – அரை கப், மல்லி – அரை கப், பச்சை மிளகாய் – 1, எலுமிச்சம்பழச்சாறு – 1, உப்பு – 1/2 ஸ்புன்.

கார (சிவப்பு) சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 3 பல், வெல்லம் – 1 டீஸ்பூன், புளி -சிறிய துண்டு, உப்பு – 1/2 ஸ்புன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கப் புதினா இலை, ஒரு கப் கொத்தமல்லி இலை, ஒரு பச்சை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை சேர்க்க வேண்டும். இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கிரீன் சட்னி தயாராகிவிடும்.

அதேபோல் மிக்ஸி ஜாரில் ஆறு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் வெல்லம், சிறிய துண்டு புளி, மூன்று பல் பூண்டு மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் காரச்சட்னி தயாராகிவிட்டது.

பிறகு கடலை மாவுடன் சோடா உப்பு சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை முக்கோண வடிவில் வெட்டி வைக்க வேண்டும். பிறகு ஒரு பிரட் துண்டில் பச்சை சட்னியும், ஒரு பிரட்டில் கார சட்னியும் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி பிரட் துண்டுகளின் நடுவே வைத்து விட வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடு படுத்தி, அதில் ஸ்டப்பிங் செய்து வைத்துள்ள பிரட்களை சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.

- Advertisement -