சுப காரியத்தில் தொடர்ந்து தடை, நல்ல நாட்களில் கூட வீட்டில் நிம்மதியின்மை ஏற்பட்டால் அருகில் இருக்கும் கோவிலுக்கு இதை செய்யுங்கள்!

temple-kumkum
- Advertisement -

சுப காரியத்தில் தடைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் மனதில் ஒரு விதமான சஞ்சலம் உருவாக துவங்கிவிடும். அது போல நல்ல நாட்களில் கூட நிம்மதி இல்லாமல் வீட்டில் ஏதாவது ஒரு சண்டை, சச்சரவு வந்து கொண்டே இருந்தால் அங்கு நிம்மதி குறைவு ஏற்படுகிறது. நாம் ஏதோ குறை வைத்து விட்டோம் போல, அதனால் நமக்கு இப்படி நடக்கிறது என்று யோசிக்க தொடங்கி விடுவோம். இப்படி சுபகாரியத் தடைகள் நீங்க, குடும்பத்தில் எப்போதும் நிம்மதி இருக்க அருகில் இருக்கும் கோவிலுக்கு இதை செய்து பாருங்கள்.

pooja-coconut

வீட்டில் ஏதாவது ஒரு நல்ல நாள், விசேஷம் என்றால் பூஜைகள் செய்வது வழக்கம். அந்த பூஜை நாட்களில் கூட குடும்பத்தில் ஏதாவது ஒரு சண்டை, சச்சரவு என்றால் எதற்காக பூஜை செய்கிறோம்? என்றாகிவிடும். பூஜைகள் செய்வது என்பது மன நிம்மதிக்காகவும், குடும்ப நலனுக்காகவும், அப்படி இருக்கும் பொழுது அந்த பூஜையில் கூட தொடர்ந்து சண்டை, சச்சரவுகள் வந்து கொண்டே இருந்தால் மன வருத்தம் உண்டாகும்.

- Advertisement -

ஜாதகத்தில் எந்த குறையும் இல்லை ஆனால் வரன் பார்ப்பதில் தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், தாமதங்கள் ஏற்படும். கிட்டத்தட்ட முடிந்து விடும் என்று நினைத்த வரன் கூட கடைசி நேரத்தில் தட்டிக் கழித்து விடுவது உண்டு. உங்கள் மனதில் நினைத்தது போல் சரியான வரன் கிடைக்காமல் பலமுறை ஏமாற்றம் அடைவது போன்ற சுபத் தடைகள் ஏற்படும் பொழுது இந்த எளிய பரிகாரத்தைச் செய்து பயன் பெறலாம்.

fight2

அது மட்டுமல்லாமல் குழந்தை பிறப்பில் தாமதப்படுவது, வீட்டில் விசேஷம் வைக்க வேண்டுமானால் அதற்கான சரியான நாள் அமையாமல் தள்ளிக் கொண்டு செல்வது, குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் சண்டை, சகோதரர்களுக்குள் சண்டை, மாமியார் மருமகள் சண்டை என்று ஏதாவது ஒரு சண்டையினால் மற்றவர்களுடைய நிம்மதியும் கெட்டுப் போய் விடுகிறது என்று நினைக்கும் பொழுது அருகில் இருக்கும் கோவிலுக்கு இதை செய்யலாம்.

- Advertisement -

நாம் என்ன தான் அப்படி செய்ய வேண்டும்? என்பதைப் பார்ப்போம். அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்குள்ள அம்மனிடம் மனதார உங்கள் பிரச்சனைகள் தீர பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் கைகளால் குங்குமத்தை வாங்கி அந்த கோவில் அர்ச்சகரிடம் தானமாகக் கொடுங்கள். குங்கும தானம் செய்வதன் மூலம் இந்த பிரச்சனைகள் யாவும் நிவர்த்தி அடையும் என்கிறது ஆன்மீகம். குங்குமம் மட்டுமல்ல, இப்படி நீங்கள் அம்மன் கோவிலுக்கு தேவையான பொருட்களை உங்களால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் சுபகாரியத் தடைகள் அனைத்தும் விலகி சுபிட்சம் உண்டாகும்.

temple

மேலும் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கத் துவங்கும். கோவிலில் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கலாம். அதே போல நெய் வாங்கி கொடுப்பது அல்லது கோவிலுக்கு சம்பந்தப்பட்ட இதர பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, கோவிலுக்கு கைங்கர்யம் செய்வது போன்ற விஷயங்களை செய்து கொடுத்து வந்தால் உங்கள் குடும்பத்தில் நிகழும் கெட்ட விஷயங்கள் எல்லாம் நல்ல விஷயங்கள் ஆக மாறும். கோவிலை சுத்தம் செய்யும் பணியை ஏற்றுக் கொண்டு செய்வது, கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பது போன்ற விஷயங்களை எல்லாம் செய்து வந்தால் குடும்பம் நல்ல வளம் பெறும்.

- Advertisement -