- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுக்கிர யோகம் உண்டாக வழிபாடு

சுக்கிர யோகம் உண்டாக வழிபாடு

- Advertisement -

சுக்கிரன் என்பவன் பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவர். இவர் நவகிரகங்களில் ஒருவராக இருக்கிறார். இவரின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அவருடைய வாழ்க்கையில் எந்தவித கஷ்டத்தையும் அவர் அனுபவிக்க மாட்டார் என்றே கூற வேண்டும். தங்க கரண்டியால் உணவருந்தும் அளவிற்கு வசதி மிக்கவர்களாக மாறிவிடுவார்கள் என்று கூட கூறலாம். செல்வ செழிப்போடு மட்டுமல்லாமல் ஆடம்பர வசதிக்கும் அதிபதியாக திகழக்கூடியவர்தான் சுக்கிர பகவான் என்பதால் அனைத்து விதமான சுகபோகங்களையும் அனுபவிக்கும் ஆற்றல் என்பது ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட சுக்கிர யோகத்தை பெறுவதற்கு எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுக்கிர யோகம் உண்டாக வழிபாடு

சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழக்கூடியது வெள்ளிக்கிழமை. அன்றைய நாளில் சுக்கிர ஹோரை வரும் நேரத்தில் சுக்கிரனுக்குரிய அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயார் வழிபாடு செய்ய வேண்டும் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். நாமும் அந்த வழிபாட்டை செய்து கொண்டுதான் இருப்போம். இப்படி மகாலட்சுமி வழிபாடு செய்வதோடு சுக்கிர பகவானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்தோம் என்றால் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

- Advertisement -

நம்முடைய கையில் இருக்கக்கூடிய ஐந்து விரல்களை பயன்படுத்தி பல முத்திரைகளை நம்முடைய சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த முத்திரைகள் ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை தரக்கூடியதாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கிய நிமிர்த்தமாகவும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூற வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு விதமான பெயர்களை வைத்து அந்த முத்திரையை செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்று இருக்கின்றது.

சுக்கிரனுக்குரிய முத்திரையாக திகழ்வதுதான் சுக்கிர முத்திரை. இதை குபேர முத்திரை என்றும் கூறுவதுண்டு. இந்த முத்திரையை கையில் வைத்துக்கொண்டு சுக்கிர பகவானின் மந்திரத்தை கூறினோம் என்றால் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு வெள்ளிகிழமை அன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையை பயன்படுத்துவது என்பது மிகவும் நல்லது.

- Advertisement -

வீட்டில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வீட்டு பூஜை அறையில் தனியாக ஒரு நெய் தீபத்தை ஏற்ற வேண்டும். பிறகு சுக்கிரனுக்கு பிடித்தமான வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு உணவு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அந்த தீபத்திற்கு முன்பாக ஒரு விரிப்பை விரித்து அதில் அமர்ந்து இரண்டு கைகளிலும் சுக்கிர முத்திரையை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு குறைந்தபட்சம் 15 நிமிடம் ஆவது நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் சுக்கிரனின் யோகம் நமக்கு உண்டாகும். செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மந்திரம்:

ஓம் அச்வத் வஜாய வித்மஹே
தனூர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே:மஹாகந்த சஷ்டி விரத வழிபாடு 2024

சுக்கிர பகவானின் இந்த மந்திரத்தை முழுமனதோடு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர ஹோரையில் கூறுபவர்களுக்கு செல்வ செழிப்பு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்