சுக்கிர தீப வழிபாடு

sukra deepam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஒன்று என்றால் அது பணம் தான். பணம் பத்தும் செய்யும், பாதாளம் வரை போகும் என்று பல மொழிகளை நாம் கேட்டிருந்தாலும் நம்முடைய வாழ்க்கையில் அனுபவரீதியாக பணத்திற்காக நாம் அன்றாடம் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்கும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடனை தீர்க்கவும் சுக்கிர பகவானுக்கு தீபம் எப்படி ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய வாழ்வில் நடக்கக்கூடிய ஒவ்வொரு காரியத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு கிரகங்கள் காரணமாக அமைகின்றன. இந்த கிரகங்கள் நம்மை கஷ்டப்படுத்துவதற்கு காரணம் நம்முடைய கர்ம வினைகளே. இப்படி நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு கிரகமும் நமக்கு நன்மைகளையோ அல்லது தீமைகளையும் செய்கின்றன.

- Advertisement -

அதன் அடிப்படையில் பணத்தை தரக்கூடிய கிரகமாக திகழக் கூடியவர் சுக்கிர பகவான். நம்முடைய வாழ்க்கையில் பணரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றால் நாம் சுக்கிர பகவானிடம் தஞ்சம் அடைய வேண்டும். பணம் வந்துவிட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடனும், கஷ்டங்களும் நீங்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

பொதுவாக சுக்கிர பகவானின் அருள் பெற்ற நாளாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அது அம்பாளுக்குரிய நாள் என்பதால் அன்றைய தினம் சுக்கிர பகவானையும் அம்பாளையும் சேர்ந்து வழிபடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் சுக்கிர பகவானுக்கு என்று நட்சத்திரம் இருக்கிறது. பரணி, பூராடம், பூரம் இந்த மூன்று நட்சத்திரங்களும் சுக்கிர பகவானுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது.

- Advertisement -

எப்பொழுதுமே சுக்கிர பகவானை நாம் தனித்து வணங்காமல் சுக்கிர பகவானுடன் அம்பிகையும் சேர்த்து வழிபட வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு முழு பலனும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் பொழுது இந்த மூன்று நட்சத்திரங்களில் பூரம் நட்சத்திரம் அம்பாளுக்குரிய நட்சத்திரம். ஆதலால் மாதத்தில் எந்த நாள் பூரம் நட்சத்திரம் வருகிறதோ அந்த நாளில் சுக்கிரதீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். செல்வம் உயரும். எப்படி தீபம் ஏற்ற வேண்டும்?

பூர நட்சத்திர நாளன்று ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்தில் ஆறு அகல் விளக்குகளை வைக்க வேண்டும். பிறகு அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி மற்றும் வெள்ளெருக்கு திரி இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து அதில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். வெள்ளெருக்கன் திரியையும் சேர்த்து நாம் தீபம் ஏற்றும் பொழுது கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க பிள்ளையார் மந்திரம்

இப்படி மாதா மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திர நாள் அன்று சுக்கிர தீப வழிபாட்டை நாம் மேற்கொண்டால் நம் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். மேலும் கடன் பிரச்சனை அனைத்தும் நீங்கும். வசதியான, சுகமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -