சுக்கிர தோஷம் நீங்க மொச்சை பரிகாரம்

sukran mochai
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் சுக்கிர பகவானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைத்தால் தான் அவர்கள் செல்வ செழிப்புடன் நன்றாக வாழ்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட சுத்திர பகவானால் நமக்கு தோஷம் ஏற்பட்டு இருந்தால் அந்த தோஷத்தால் நமக்கு தடைகள் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவு சுக்கிரதோஷத்தை நீக்குவதற்கு மொச்சைக்கொட்டையை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

சுக்கிர தோஷம் ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் வீடு கட்டும் வாய்ப்புகள் இருந்தாலும் அவர்களால் வீடு கட்ட முடியாமல் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருக்கும். மேலும் திருமணம் செய்வதில் தடங்கல்கள் ஏற்படும். திருமணம் செய்தவர்களாக இருந்தால் கணவன் மனைவி பிரிவு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பெண்களால் அவமானங்களும் அசிங்கங்களும் ஏற்படவேண்டிய சூழ்நிலை உண்டாகும். வண்டி வாகன விபத்துகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது .

- Advertisement -

இப்பொழுது சுத்திர தோஷத்தை நீக்குவதற்குரிய பரிகாரத்தை பார்ப்போம். சுக்கிர பகவானுக்கு உரிய தானியமாக வெள்ளை மொச்சை திகழ்கிறது. இந்த வெள்ளை மொச்சை வைத்து நாம் பரிகாரம் செய்தால் சுக்கிரதோஷத்தில் இருந்து தடைகள் அனைத்தும் விலகும்.

மொச்சை பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் எந்த கிழமை வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 9 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு வெள்ளை நிற சதுரமான துணி தேவை. அந்த துணியில் ஒரு கைப்பிடி அளவு மொச்சை கொட்டையை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூட்டையை உறங்கும் பொழுது தலையணைக்கு கீழ் வைத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து இந்த மொச்சை கொட்டையை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து 9 நாட்கள் மொச்சை கொட்டையை தலையணைக்கு கீழ் வைத்து படுத்து உறங்கி காலையில் எழுந்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். 10வது நாள் காலையில் இந்த மொச்சைக்கொட்டை அனைத்தையும் வேகவைத்து காக்கைக்கு தானமாக வழங்க வேண்டும். அன்று மாலை அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று நெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபட வேண்டும்.

தோஷ நிவர்த்தி ஆவதற்கு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை தானமாக வழங்க வேண்டும். அதாவது வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆடை, வெள்ளை நிற பூக்கள், வெள்ளை நிறத்தில் இருக்கும் இனிப்புகள், தாளிக்காத தயிர் சாதம் என்று வெள்ளையாக இருக்கும் பொருட்களை நாம் பிறருக்கு தானமாக வழங்கும் பொழுது தோஷ நிவர்த்தி ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

இந்த எளிமையான பரிகாரத்தை சுக்கிரதோஷம் இருப்பவர்கள் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பான முறையில் தோஷம் விலகி சுக்கிர பகவானின் அருள் கிடைத்து தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடக்கும்.

- Advertisement -