வெயில் காலத்தில் ரோஜா செடி வாடி போகாமல் கொத்துக் கொத்தாக பூக்க இந்த 4 விஷயத்தை மறக்காம பண்ணுங்க! கோடை கால ரோஜா செடி பராமரிப்பு எப்படி?

cow-dung-rose-plant
- Advertisement -

வெயில் காலத்திலும் ரோஜா செடி கொத்துக் கொத்தாக பூப்பதற்கு கண்டிப்பாக இந்த சில விஷயங்களை கடைபிடித்தாக வேண்டும். அடிக்கும் வெயிலில் ரோஜா செடிகள் வாடி போவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. செடி முழுவதும் பச்சை பசேலென பக்க கிளைகள் நிறைய முளைத்து கொத்துக் கொத்தாக பூக்களை கொடுக்க வெயில் காலத்தில் எப்படியான பராமரிப்பை நாம் கொடுக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வெயில் காலத்தில் எல்லா செடிகளை போலவும் ரோஜா செடிக்கு நிறையவே தண்ணீர் தேவைப்படுகிறது. மற்ற நேரங்களை காட்டிலும் ரோஜா செடிக்கு வெயில் காலங்களில் அதிக அளவு தண்ணீரை அவ்வப்போது தெளித்து வர வேண்டும். தண்ணீரை மொத்தமாக ரோஜா செடிக்கு ஊற்ற கூடாது. எனவே ஸ்பிரே பாட்டிலில் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளிவிட்டு தெளித்து வர வேண்டும். ரோஜா கட்டிங் செய்வதிலும் கோடை காலத்தில் தனி பராமரிப்பு தேவை. ரோஜா செடியின் இலைகளில் ஒரு சில இலைகள் பழுத்து போய்விடும். இந்த இலைகளை நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் எல்லா இலைகளும் அதே போல பலுத்துப் போய் பின்பு வாடி போக வாய்ப்புகள் உண்டு. எனவே ஒவ்வொரு பழுத்த இலைகளை அவ்வப் போது வெட்டி விட வேண்டும்.

- Advertisement -

இலைகள் மட்டுமல்லாது கிளைகளும் ஒரு சில கிளைகள் பச்சையாக இல்லாமல் பாதி அளவிற்கு மட்டும் பிரவுன் நிறத்தில் வாடிப் போய் இருக்கும். இந்த வாடிப் போன பகுதிக்கு கீழே நீங்கள் வெட்டி விட வேண்டும். வெட்டி விடும் பொழுது நேராக வெட்டாமல் கொஞ்சம் கத்தரிக்கோலை சாய்த்து பிடித்து க்ராசாக வெட்ட வேண்டும். வெட்டிய பின்பு நீங்கள் வெட்டிய இடத்தில் மஞ்சள் தூள் குழைத்து வைக்கலாம் அல்லது அதற்கு பதிலாக மாட்டு சாணம் அல்லது பட்டை பொடி போன்றவற்றையும் வைக்கலாம். இதனால் அதிலிருந்து மீண்டும் கிளை பச்சை பசேலலென வளர ஆரம்பிக்கும்.

ரோஜா செடியை சுற்றிலும் வளரக் கூடிய களை செடிகளை அவ்வ போது களைந்தெறிய வேண்டும். ரோஜா செடியில் மற்ற தேவையற்ற களைச் செடிகளை நீக்கி விட்டால் தான் ரோஜா செடி நன்கு செழித்து வளரும். களைச் செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்த பின்பு ரோஜா செடியை சுற்றிலும் இருக்கும் மண் கலவையை நன்கு கிளறி விட வேண்டும். அப்போது தான் இறுக்கம் தளர்ந்து, செடிக்கு நல்ல ஒரு ஆக்சிஜன் கிடைக்கும்.

- Advertisement -

காற்றோட்டமான மண்ணில் தான் செடிகள் நன்கு செழித்து வளரும். எனவே மண்ணை எப்பொழுதும் இறுக்கமாக இல்லாமல், காற்றோட்டமாக தளர்வாக வைத்திருக்க வேண்டும். செடிகள் வாடாமல் இருக்க பொட்டாசியம் சத்து அதிக அளவு கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் செய்தாலும் நீங்கள் தேவையான தண்ணீர் மற்றும் தேவையான உரத்தை வழக்கம் போல நீங்கள் எப்படி கொடுப்பீர்களோ, அதே போல கொடுத்து வாருங்கள்.

முட்டை ஓடு, தேயிலைத் தூள் போன்றவை ரோஜா செடி வளர்வதற்கு நல்ல உரங்களாக இருக்கின்றன. அது போல ஏழு இலைகள் கொண்ட கிளையையும் நீக்கி விட வேண்டும். இது செடியின் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்யும், ஆபத்தான கிளை ஆகும். ஒரு கிளையில் ஏழு இலைகள் இருந்தால் அதை வெட்டி எடுத்து விட வேண்டும். இது போல ரோஜா செடியை பராமரித்தால் வெயில் காலத்திலும் பக்க கிளைகள் நிறைய முளைத்து, கொத்து கொத்தாக பூக்களை உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.

- Advertisement -