இந்த சம்மர்லையும் உங்களுடைய முகம் வாடாமல் இருக்க நச்சுன்னு 4 டிப்ஸ்.

face13
- Advertisement -

வெயில் காலத்தில் நம்முடைய முகம் பொலிவிழந்து காணப்படும். அதோடு மட்டுமல்லாமல் சில பேருக்கு அடிக்கிற வெயிலில் முகத்தில் அதிகமாக எண்ணெய் வடியக்கூடிய பிரச்சனை இருக்கும். சில பேருக்கு ஓபன் போர் வெயிலில் அதிகமாகும், குட்டி குட்டி கொப்பளங்கள் எல்லாம் முகத்தில் வந்து அழகை குறைக்கும். அதேபோல வெயிலில் சென்று வந்தால் நம்முடைய முகம் சன் டேன்னாகி ரொம்பவும் கருத்துப் போய்விடும்‌. இந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் தப்பிக்க என்ன செய்வது. இதோ சுலபமான அழகு குறிப்பு உங்களுக்காக.

Step 1:
முதலில் உங்களுடைய முகத்தை மேக்கப் இல்லாமல் கழுவிக்கொள்ளுங்கள். முகத்தில் கொஞ்சமாக அலோவேரா ஜெல் தடவி நன்றாக மூன்று நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பிறகு முகத்தை கழுவ வேண்டாம். ஆலோவேரா ஜெல் இருக்கும்போதே ஒரு ஐஸ் க்யூபை எடுத்து முகம் முழுவதும் ஒரு நிமிடம் மீண்டும் மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள். (இப்படி செய்தால் சருமத்தில் இருக்கும் ஓபன் போர்ஸ் சிறியதாக தொடங்கும். கொப்பளங்கள் குறையும்.)

- Advertisement -

Step 2:
அடுத்தபடியாக முகத்தில் இருக்கும் ஒயிட் ஹெட் பிளாக் ஹெட்ஸை ஸ்க்ரப் செய்ய வேண்டும். இறந்த செல்கள் நீங்கினால் தான் முகம் பொலிவு பெறும். இதற்கு நீங்கள் அரிசி மாவை பயன்படுத்தலாம். அல்லது சிலிக்கான் ஸ்கிரப்பர் இப்போது கடைகளில் விற்கிறது. அதை வாங்கி முகத்தில் லேசாக ஸ்கிரப் செய்யலாம். உங்க முகத்தில் ஏதாவது ஒரு ஃபேஸ் வாஷ் போட்டுவிட்டு அதன் பின்பு இந்த சிலிக்கான் ஸ்கிரப்பரை வைத்து மயில்தாக ஸ்கிரப் செய்து எடுத்து விடுங்கள்.

Step 3:
அடுத்து முகத்துக்கு ஒரு பேக் போடணும். ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன், சார்கோல் பவுடர் 1 ஸ்பூன், தேவையான அளவு ரோஸ் வாட்டர் ஊற்றி இதை நன்றாக கலந்து முகம் முழுவதும் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெறும். இது முகத்தில் இருக்கும் தேவையில்லாத எண்ணெய் பிசுக்கை நீங்கிவிடும். உங்களிடம் சார்கோல் பவுடர் இல்லை என்றால், அதற்கு பதில் சந்தன பவுடரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Step 4:
அடுத்து நம்முடைய கழுத்தும் கைகளும் தான் வெயிலில் ரொம்பவும் கருப்பாக மாறி இருக்கும். அந்த சன் டேனை சரி செய்ய இந்த பேக் போடலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவு 5 ஸ்பூன், காபித்தூள் 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 1/2 ஸ்பூன், லெமன் ஜூஸ் 1 ஸ்பூன், இதை கலக்க தேவையான அளவு தயிர், எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து கழுத்திலும், கை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து நன்றாக ஸ்கிரப் செய்து கழுவி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாசலின் உடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வீட்டிலே சூப்பரான லிப் பாம் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுக்கப்புறம் உங்களுக்கு எப்பவுமே லிப்ஸ்டிக் தேவை படாது.

இப்போது முகம் கை கால்கள் எல்லா இடமும் டேன் ரிமூவ் ஆகி சூப்பராக பிரஷ்ஷாக இருக்கும். இரவு தூங்க செல்லும் போது சருமத்தில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து கொள்ளவும். அவ்வளவு தான். இந்த வெயில் காலத்தில் கூட உங்களுடைய முகம் எப்போதும் பொலிவாக இருக்கும். அழகு குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -