சன் டேன் ஆன இடங்களை உடனடியாக வெள்ளையாக மாற்றவும், கருத்து போன கழுத்து, கை, கால், முட்டி பகுதிகளை வெள்ளையாக மாற்றவும், இது ஒரு சூப்பரான ஐடியா. இன்ஸ்டன்டா ரிசல்ட்டை கண்முன்னே காணலாம்.

dark-neck-baking-soda
- Advertisement -

நம்முடைய உடம்பில் சில இடங்கள் மட்டும் கருப்பாக இருக்கும். அந்த கருப்பான இடங்களை வெள்ளையாக மாற்றவும், அதேசமயம் வெயிலில் சென்று வந்த சன் டேனை சரி செய்யவும், ஒரு அருமையான செலவு இல்லாத குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்பை கைமுட்டி, கால் முட்டி, அக்குள் பகுதி, கழுத்து பகுதி, போன்ற இடங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். முகத்தில் இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டாம். காரணம் முகத்தில் இருக்கக்கூடிய தோல் மிகவும் சென்சிட்டிவ் ஆக இருக்கும். இதில் சேர்க்கக்கூடிய பொருட்களால் முகத்தில் அலர்ஜி உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் ஈனோ சால்ட் 1 சின்ன பேக்(ஒரு டேபிள் ஸ்பூன்), ஷாம்பு 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்க்கும்போது நுரை பொங்கி நமக்கு ஒரு லிக்விட் கிடைக்கும். (எந்த பிராண்ட் ஷாம்பூ வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.) அதை நன்றாக ஒரு ஸ்பூனை வைத்து கலந்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு பிரஷில் இந்த பேக்கை எடுத்து கருப்பான இடத்தின் மேல் நன்றாக அப்ளை செய்யுங்கள். உதாரணத்திற்கு கழுத்து பகுதி, அக்குள் பகுதியில் அப்பிளை செய்து விட்டு, அந்த எலுமிச்சம்பழத் தோலை வைத்து ஐந்து நிமிடங்கள் வட்ட வடிவில் கருப்பான இடத்தை ரப் செய்து, ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

மீண்டும் லேசாக அந்த எலுமிச்சம் பழத்தோலையே வைத்து தேய்த்து விட்டு பேக்கை காய விட்டு விடுங்கள். 15 நிமிடம் கழித்து ஒரு துணியை வைத்து சுத்தமாக பேக்கை துடைத்து எடுத்து விடுங்கள். அப்போதே உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். கருப்பான அந்த இடம் கருமை நிறம் நீங்கி வெள்ளையாக மாறி இருக்கும்.

- Advertisement -

அதன்பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரே ஒரு விட்டமின்  ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல், ஆலுவேரா ஜெல்ல் 1 டேபிள் ஸ்பூன் போட்டு, நன்றாக அடித்து கலந்து கொள்ளுங்கள். இந்த ஜெல்லை கருப்பான இடத்தின் மேலே லேசாக தடவி விட்டு விட வேண்டும். அவ்வளவுதான் உங்களுடைய ஸ்கின் பழையபடி மாறிவிடும்.

இதேபோல கைமுட்டி கால் முட்டி கருப்பாக இருந்தாலும் இந்த குறிப்பை பின்பற்றி வரலாம். கழுத்தில் சில பேருக்கு செயின் போட்டு போட்டு அந்த இடம் கருத்து போனது போல இருக்கும் அல்லவா. அந்த இடத்திலும் இந்த குறிப்பை முயற்சி செய்யலாம். ஆனால் மிகவும் அடர்ந்த கருப்பு நிறம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது ஒரு சில நாட்களில் நல்ல ரிசல்ட் தெரியும். அதோடு குறிப்பை நிறுத்தி விடுங்கள். (அதாவது மாதத்தில் நான்கு முறை இந்த குறிப்பை பின்பற்றி விட்டு அதோடு நிறுத்துவது நல்லது.) மீண்டும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

பின்குறிப்பு: உங்களுக்கு முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் இருக்கக்கூடிய ஸ்கின் சென்சிடிவ் ஆக இருந்தால் இந்த கிரீமை லேசாக பேட்ச் டெஸ்ட் எடுத்துவிட்டு, பின்பு எல்லா இடங்களிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -