காய்கறி எதுவும் சேர்க்காமல் தக்காளி, வெங்காயத்துடன் வெறும் இரண்டு பொருட்களை மட்டும் சேர்த்து செய்யும் இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். நாவில் நீர் சொட்ட சொட்ட அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும்

appala-kulambu
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் மதிய உணவுடன் சாம்பார், கீரை, வத்த குழம்பு, மீன் குழம்பு என்று ஒவ்வொரு விதமான குழம்பு வகைகளை செய்வது வழக்கம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறிகளை சேர்த்து இவ்வாறாக உணவுகளை சமைத்து தருகின்றோம். ஆனால் ஒரு சில நாட்களில் காய்கறிகள் இல்லாமல் வெறும் தக்காளி, வெங்காயம் மட்டும் வைத்துக்கொண்டு குழம்பு செய்ய வேண்டியிருந்தால் அப்போது சற்றும் யோசிக்காமல் இந்தக் அப்பா குழம்பை செய்து விடுங்கள். அது அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதிலும் இதனுடன் பூண்டு சேர்த்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பூண்டு, அப்பள குழம்பை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 5, பூண்டு – 15 பல், அப்பளம் – 100 கிராம், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 100 கிராம், புளி – எலுமிச்சை பழ அளவு, உப்பு – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் எலுமிச்சை பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் ஐந்து தக்காளி பழங்களை நான்கு துண்டுகளாக அரிந்து கொண்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் 100 கிராம் அப்பளத்தை பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் 15 பல் பூண்டை தோலுரித்து சேர்த்து, லேசாக வதக்க வேண்டும். பிறகு பேஸ்ட்டாக அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு, கொதிக்கவிட வேண்டும். பிறகு இதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் ஒரு தட்டு போட்டு மூடி, 5 நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு, மிளகாய் தூள் வாசனை சென்றது கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு பொரித்து வைத்துள்ள அப்பளத்தை உடைத்து இந்த குழம்புடன் சேர்த்து விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, ஒருமுறை கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பூண்டு, அப்பள குழம்பு தயாராகிவிட்டது

- Advertisement -