வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் எப்படி சுலபமாக செய்வது? இது தெரிஞ்சா இனி அடிக்கடி வெண்டைக்காய் பொரியல் தான் உங்க வீட்டில்!

vendakkai-fry1_tamil
- Advertisement -

பலரும் வெண்டைக்காய் செய்ய தயங்குவதற்கு காரணம் அதன் வலுவலுப்பு தன்மை ஆகும். வழுவழுப்பு தன்மை நீங்குவதற்கு எளிய வழிகள் உண்டு. சமைக்கும் பொழுது சிறிதளவு சர்க்கரை சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வலுவலுப்பு தன்மை நீங்கும். பேன் காற்றில் அல்லது வெயிலில் காய வைத்து எடுத்து பின்பு சமைத்தாலும் வழுவழுப்பு தன்மை குறையும். சூப்பரான சுவையில் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி எப்படி தயாரிப்பது? என்று இனி தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – இரண்டு, பச்சை மிளகாய் – 3, கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – கால் ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப்.

- Advertisement -

செய்முறை

வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவிற்கு வெண்டைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் கூட ஈரப்பதம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பொரியல் செய்யும் அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய தட்டில் போட்டு பேன் காற்றில் பத்து நிமிடம் ஆறவிட்டு விடுங்கள். அப்பொழுது தான் அதன் வலுவலுப்பு தன்மை பாதி அளவிற்கு நீங்கும்.

பிறகு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை, பச்சை மிளகாய்களை கீறி சேர்த்து வதக்குங்கள். இவை லேசாக வதங்கியதும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள்.

- Advertisement -

வெங்காயம் பாதி அளவுக்கு நன்கு வெந்து வந்ததும், பேன் காற்றில் ஆற வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி விடுங்கள். ரெண்டு நிமிடம் திறந்த நிலையில் அவ்வப்பொழுது கிளறிவிட்டு வேக விடுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுத்த ரெண்டு நிமிடத்திற்கு மூடி வைத்து வேக விடுங்கள். அதன் ஆவியிலேயே முக்கால் பாகம் நன்கு பஞ்சு போல வெந்து விடும்.

இதையும் படிக்கலாமே:
தோசை மாவு இல்லாத சமயத்தில் இனி கவலையே வேண்டாம். 10 நிமிடத்தில் இப்படி கூட மொறுமொறு தோசை செய்யலாமே.

பிறகு தேவையான அளவிற்கு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். குறைந்த தீயிலேயே பச்சை வாசம் போக நன்கு பிரட்டி விட்டுக் கொண்டே இருந்தால் நிறம் மாறி நன்கு வெண்டைக்காய் சுருள வதங்கி விடும். அதன் பிறகு தேங்காய் பூ தூவி ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், சூப்பரான வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் ஃப்ரை ரெடி! இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு தொட்டுக்க அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -