நீர்சத்து மிக்க சுரைக்காயில் சுவையான பாயாசம் ரெசிபி இதோ உங்களுக்காக

bottle ground payasam recipe
- Advertisement -

வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் முதலில் நாம் செய்வது இனிப்பு தான். அந்த இனிப்புகளிலும் அதிகமாக செய்வது பாயாசம் தான். இந்த பாயாசத்தை பொருத்தை பொறுத்த வரையில் நாம் பலவகையான பாயாசத்தை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சமையல் குறிப்பு பதிவில் கொஞ்சம் வித்தியாசமான அதே நேரத்தில் அட்டகாசமான சுவையில் ஒரு பாயாச ரெசிபி பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சுரைக்காய் -1,
காய்ச்சிய திக்கான பால் – 1/2 லிட்டர்,
சர்க்கரை – 1/4 கப்,
கண்டென்ஸ்ட் மில்க் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 2,
முந்திரி – 10,
திராட்சை – 10,
நெய் – 3 டேபிள் ஸ்பூன்

- Advertisement -

செய்முறை

முதலில் சுரைக்காயில் உள்ள தோள்களை நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு காய் சீவும் துருவதில் சுரைக்காய் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு கப் அளவிற்கு வரும் படி அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் அது சரியாக இருக்கும்.

அடுத்து அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் நெய் ஊற்றி முந்திரி திராட்சை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அதே நெய்யில் துருவி வைத்த சுரைக்காய் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வரை வதக்குங்கள். இப்படி வதக்கும் போது சுரைக் காயில் உள்ள பச்சை வாடை, நீர் தன்மை எல்லாம் போய்விடும்.

- Advertisement -

அதன் பிறகு அதன் பிறகு சர்க்கரை ஏலக்காய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். இந்த நேரத்திற்குள்ளாக சர்க்கரை நன்றாக கரைந்து வந்து விடும். கடைசியாக கன்டென்ஸ் மில்க் சேர்த்து ஒரு முறை கலந்து ஒரே ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: திருவாதிரை களி செய்யும் முறை

கடைசியாக ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி திராட்சையை இதன் மேல் தூவி விட்டு பரிமாறுங்கள். அட்டகாசமான சுவையில் சுரைக்காய் பாயாசம் தயார். இதை செய்வதும் மிகவும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் ஒரு முறை இந்த பாயாசத்தை செஞ்சு பாருங்க இனி என்ன விசேஷ நாட்களில் இந்த பாயாசம் தான் செய்வீங்க.

- Advertisement -