இதுவரைக்கும் குண்டுமணி தங்கத்தை கூட வாங்கி சேர்க்க முடியாதவர்கள், 48 நாட்களில் தங்கம் வாங்கும் யோகத்தை பெறலாம். இந்த மந்திரத்திற்கு அப்படி ஒரு அபரிவவிதமான சக்தி!

எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் சக்தி விநாயக பெருமானுக்கு உண்டு. அந்த வரிசையில் தங்கம் வாங்க வேண்டும் என்ற யோகத்தை நாம் பெறவேண்டும் என்றாலும் அந்த விநாயகப் பெருமானை வழிபடலாம். தினம்தோறும் விநாயகரைப் பற்றிய ஒரு பதிவினை படிப்பதே நமக்கு ஒருவகையில் அதிர்ஷ்டத்தை தரும் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். பதிவை படிக்கும் போது விநாயகப் பெருமானின் பெயரை உச்சரிப்பதே பாக்கியம் அல்லவா? இப்படியாக சுவர்ண விநாயகரைப் பற்றிய ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

lakshmi-ganapathy

தங்கமாக இருந்தாலும் வெள்ளியாக இருந்தாலும், நமக்கு அதை வாங்க கூடிய யோகம் என்பது இருக்க வேண்டும். அப்படி அதிர்ஷ்டமும் யோகமும் உள்ளவர்களால் தான், மகாலட்சுமி அம்சம் நிறைந்த இப்படிப்பட்ட பொருட்களை வாங்க முடியும். லட்சுமியின் அம்சம் எந்த இடத்தில் நிறைந்து உள்ளதோ அந்த இடத்தில் பொன் பொருள் சேர்ந்து கொண்டே இருக்கும். பொன் பொருள் எந்த இடத்தில் சேர்ந்து கொண்டு இருக்கிறதோ அந்த இடத்தில் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள்.

நீண்ட நாட்களாக ஆசைப்பட்டும் உங்களால் தங்கத்தை வாங்கி சேர்க்க முடியவில்லையா? வாங்கி வைத்த தங்கமும் வீட்டில் தாங்காமல் அடகுக் கடைக்குப் போய்க் கொண்டே இருக்கின்றதா? உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியான பரிகாரம் தான் இது.

manjal-pillaiyar

உங்களால் முடிந்தால் சுவர்ண கணபதி திருவுருவப்படத்தை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்து இந்த பூஜையை செய்யலாம். முடியாதவர்கள், வெறும் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அந்த மஞ்சள் பிள்ளையாரை கணபதியாக நினைத்துக்கூட, இந்த பூஜையை செய்யலாம். தவறொன்றும் கிடையாது.

- Advertisement -

வெற்றிலையின் மேல் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து விட்டு, அவருக்கு அருகம்புல்லால் அலங்காரம் செய்து 48 நாட்கள், இந்த மந்திரத்தை சொல்லி பூஜை செய்ய வேண்டும். எல்லோருக்கும் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்க தெரியுமல்லவா? சாதாரணமாக மஞ்சளை பிசைந்து, மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அவருக்கு குங்குமப் பொட்டு வைத்து, வாசனை மிகுந்த பூக்களையும் சூட்டி அந்த மஞ்சள் பிள்ளையாரை சுற்றி அருகம்புல்லால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்பாக லட்சுமி கணபதி என்று சொல்லப்படும் சுவர்ண கணபதியை உங்களுடைய வீட்டில், ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில் ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பாக, கணபதியின் இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்குங்கள். தினந்தோறும் வெறும் 11 முறை உச்சரித்தால் கூட போதும்! உங்களுக்காக சுவர்ண கணபதியின் மூல மந்திரம் இதோ!

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா!

Gold

அவ்வளவுதாங்க! இருவரி மந்திரம்தான். உச்சரிப்பதில் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. கணபதியை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் மட்டும் போதாது. தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற குறிக்கோள் உங்களுடைய மனதில் இருந்து ஒரு துளி கூட குறைக்கக்கூடாது.

gold

தங்கம் வாங்குவதற்கு எப்படி சேமிக்க வேண்டும். தங்கத்தை வாங்கி நம்முடைய வீட்டில் குவிக்க, நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைநிறுத்த, எந்த வேலையெல்லாம் செய்து, உழைத்து நேர்மையான முறையில் சம்பாதிக்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தால், நிச்சயம் 48 நாட்கள் முடிவதற்குள் உங்கள் வீட்டிற்கு ஒரு குண்டுமணி தங்கமாவது வந்து சேரும் என்பதில் சந்தேகமே கிடையாது. அடமானம் வைத்து இருந்தாலும் அந்த நகையை மீட்டெடுப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருங்கள். அந்த நகையும் கூடிய விரைவில் உங்கள் கைக்கு வந்து சேரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் இந்த 2 தவறை ஒரு போதும் செய்து விடாதீர்கள்! பணம் வந்த வழியே போய்விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.