உங்கள் வீட்டில் இந்த 2 தவறை ஒரு போதும் செய்து விடாதீர்கள்! பணம் வந்த வழியே போய்விடும்.

lakshmi-pavakkai

நாம் ஒவ்வொருவரும் பணம் நிலைக்க வேண்டும் என்று தான் போராடுகிறோம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நம்முடைய தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக உழைக்கிறோம்? என்கிற விரக்தி வந்து விடும். உடல் உழைப்பையும், நம்முடைய பொன்னான நேரத்தையும் செலவழித்து நாம் சம்பாதிக்கும் பணம் நம் வீட்டில் எப்போதும் நிலைத்து நிற்க மகாலட்சுமியின் அருள் வேண்டும். மகாலட்சுமி எல்லோரிடத்திலும் போய் தங்கி விடுவது இல்லை. அவர்களுக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களிடம் மட்டுமே அவள் நிரந்தரமாக இருக்கின்றாள்.

gajalakshmi

பணம் இருக்கும் இடத்தில் தான் மேலும் மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மகாலட்சுமிக்கு அந்த இடத்தில் இருக்க விருப்பமாக இருக்கிறது என்பது தான் அர்த்தம். வீட்டில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் மகா லட்சுமி கடாட்சத்தை கெடுத்து விடுகிறது. அவ்வகையில் இந்த இரண்டு தவறுகள் மகாலட்சுமி வரவை தடுப்பாக அமையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படியான இந்த இரண்டு தவறுகள் என்னென்ன? என்பதைத் தான் இப்பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

முதலாவதாக வீட்டில் விசேஷ நாட்கள் மற்றும் தெய்வ வழிபாட்டுக்குரிய பொதுவான நாட்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்யும் அன்றைய நாளில் எந்த காரணம் கொண்டும் வெண்ணையை உருக்க கூடாது. நீங்கள் வெண்ணையை உருக்கினால் மகாலட்சுமி வீட்டை விட்டு சென்று விடுவாள் என்பது நம்பிக்கை. பால், தயிர், வெண்ணை மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் வெண்ணெயை உருக்கினால் அதன் மூலம் மகாலட்சுமி கடாட்சம் நீங்க பெறுவதாக ஐதீகம் உள்ளது.

butter-vennai

எனவே பூஜை செய்யும் நாட்களில், குறிப்பிட்ட இறை வழிபாட்டிற்குரிய நாட்களில் மட்டும் தவறியும் வெண்ணையை உருக்கி விடாதீர்கள். ஆனால் அந்த நாட்களில் மகாலட்சுமி அம்சம் பொருந்திய பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது மகாலட்சுமி கடாட்சத்தை இன்னும் கூடுதலாக பெருக்க வகை செய்யும்.

- Advertisement -

இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது பாகற்காய் சமையல். வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் பொழுது அவர்களுக்கு பாகற்காய் சமைத்துக் கொடுக்க கூடாது என்பது நியதி. பாகற்காய் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும் கசப்பு தன்மை இருப்பதால் அவற்றை விருந்தினர்களுக்கு விருந்து அளிப்பதன் மூலம் உறவு அறுந்து போகும் நிலை வரலாம் என்பது நம்பிக்கை. விருந்து, விசேஷம் என்று வீட்டிற்கு வருபவர்களுக்கு பாகற்காயை தவிர்த்து மற்ற காய்கறி வகைகளை உணவாக படைப்பது வழக்கம்.

pavakkai

அறுசுவைகளில் கசப்பு என்பது இருக்க வேண்டும். ஆனால் அதில் பாகற்காயை தவிர்ப்பது தான் முறையாகும். கசப்பு சுவையை வேறு வகையில் விருந்து படைக்கலாம், அதில் தவறு ஒன்றும் இல்லை. அது போல் பூஜை செய்யும் பொழுதும், நைவேத்தியங்கள் படைக்கப்படும் போதிலும் கசப்பு சுவையை தவிர்த்து விட்டு செய்வது தான் மிகவும் நல்லது. பாகற்காயை பூஜையில் சேர்த்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியானவர் வெளியில் சென்று விடுவதாக ஐதீகம் உள்ளது.

pavakkai

இனிப்பான சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும் பொழுது கசப்பான பாகற்காயை நீக்குவது லட்சுமி கடாட்சத்தை உண்டாகும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் தவிர்ப்பதால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி நிரந்தரமாக எப்போதும் இருப்பாள். பூஜைக்கு சேர்க்கப்படும் இனிப்பு வகைகளில் உப்பு சேர்த்து சமைக்கக் கூடாது என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

இதையும் படிக்கலாமே
நீங்கள் கைமாத்தாக கொடுத்த பணத்திலிருந்து, கடனாக கொடுத்த பணம் வரைக்கும், ஒரு ரூபாய் மிச்சம் இல்லாமல் வசூலாகிவிடும்! வாராக் கடனை வசூல் செய்யும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.