உங்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும் மந்திரம்

amman

உயிர்களில் மனிதர்களை மட்டுமே துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் அதிகம் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் நமது கர்ம வினை பயன் காரணமாக நமக்கு ஏற்படுவதாக இருக்கிறது.அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக இருப்பவள் அன்னை பராசக்தி. உலகத்தை இயங்க செய்பவள். பண்டைய அகண்ட பாரதம் எனப்படும் தற்போதைய பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்த்து மொத்தம் சக்தி வழிபாட்டிற்குரிய 51 சக்தி பீடங்கள் இருக்கின்றன. அந்த சக்தி தேவியின் பல பெயர்களில் ஒன்று தான் ஸ்ரீ ஸ்வர்ண கௌரி அம்மன். அந்த ஸ்வர்ண தேவிக்குரிய மூல மந்திரம் இதோ.

amman

ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்

ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா

சக்தியின் அம்சமான கௌரி தேவிக்குரிய மூல மந்திரம் இது இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு, மனதில் சக்தி தேவியை தியானித்து 108 முறை உச்சரிப்பது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, பழம் நைவேத்தியம் வைத்து, தூபங்காட்டி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபிப்பதால் குழந்தைப் பேறு இல்லாமல் தவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் தொடர்ந்து துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்படும் நிலை மாறி வளமும், மகிழ்ச்சியும் உண்டாகும். நெடுநாட்களாக நிறைவேறாமல் தாமதமான விடயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.

- Advertisement -

ஸ்வர்ண கௌரி வழிபாடு

ஸ்வர்ண கௌரி அம்மனை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் ஸ்வர்ண கௌரி தேவியை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த தினத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று நெய் அல்லது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சினைகள், சங்கடங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
புதிய வீடு கட்ட, நிலம் வாங்க மந்திரம்

English overview:
Here we have Swarna gauri moola mantra in Tamil. It is also called as Amman mantras in Tamil or Moola mantras in Tamil or Prachanaigal theera manthiram in Tamil or Veetil selvam adhigarika in Tamil.