நாளை வியாழக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. அடமானம் வைத்த நகையை சீக்கிரம் மீட்டு எடுக்க ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு இந்த விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் போதும்.

swarna-bairava
- Advertisement -

அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு செய்வது என்பது நமக்கு பல கோடி நன்மைகளை தரக்கூடிய ஒரு வழிபாட்டு முறையாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நாளை வியாழக்கிழமை அன்று, தேய்பிறை அஷ்டமியானது வந்திருக்கின்றது. எப்போதும் போல நீங்கள் தேய்பிறை அஷ்டமிக்கு வைரவர் கோவிலுக்கு சென்று மிளகு தீபம் ஏற்றுபவர்களாக இருந்தால் அதை ஏற்றலாம். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர தேவை இல்லை‌. நீங்கள் செய்யக்கூடிய அஷ்டமி வழிபாட்டுடன் சேர்த்து இந்த ஒரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் தங்க நகை அடமானத்தில் இருந்தால் அதை சீக்கிரத்தில் மீட்டெடுத்து விடலாம்.

தங்கத்தின் அதிபதியாக சொல்லப்படுபவர் குரு. குரு பகவானுக்கு உகந்த நாளாக சொல்லப்படும் கிழமை வியாழக்கிழமை. இந்த வியாழக்கிழமை அன்று அஷ்டமி திதியும் சேர்ந்து வந்திருக்கிறது. ஆகவேதான் இந்த நாளுக்கு இப்படி ஒரு சிறப்பு. நேரடியாக பரிகாரத்தை பார்த்துவிடலாம்.

- Advertisement -

ஒரு மண் அகல் தீபத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊறிறிக்கொள்ளுங்கள். அந்த நல்லெண்ணெயில் 2 சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூளைப் போட்டு விட வேண்டும். அதன் பின்பு எப்போதும் போல திரி போட்டு தீபம் ஏற்றி ஸ்வர்ணாகர்ஷண பைரவரை மனதார நினைத்து, கொண்டு உங்களுக்கு இருக்கும் நகை கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

கூடவே மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பிரசாதத்தை நிவேதனமாக வைக்க வேண்டும். எலுமிச்சம்பழ சாதம் வைத்தால் கூட போதுமானது. அந்த பிரசாதத்தை சொர்ணாகர்ஷண பைரவருக்கு நிவேதனம் செய்துவிட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். உங்களால் முடிந்தால் கொஞ்சம் நிறைய அளவில் இந்த மஞ்சள் நிற சாதத்தை செய்து ஏழை எளியவர்களுக்கு நாளைய தினம் அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கும் கோவில் உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கும் பட்சத்தில் கோவிலுக்கு சென்று இந்த தீபத்தை ஏற்றி வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டின் அருகில் சொர்ணாகர்ஷண பைரவர் சந்நிதி இல்லை, கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சுவர்ண ஆகர்ஷண பைரவரின் திருவுருவப் படத்திற்கு முன்பு இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம்.

ஸ்வர்ண அகர்ஷன பைரவர் திருவுருவப்படம் உங்களுடைய வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்கின் ஒளியில் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை ஆவாகனம் செய்து எலுமிச்சம் பழ சாதத்தை வீட்டிலேயே நிவேதனமாக வைத்து வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம். வீட்டில் அக்கம் பக்கத்தில் யாராவது ஏழை குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இந்த பிரசாதத்தை தானமாக கொடுக்கலாம்.

நாளைய தினம் இரவு 7 மணிக்கு மேல் 9 மணிக்கு முன்பாக இந்த தீப வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். அதாவது சூரிய அஸ்தமனம் ஆன பிறகு, இருட்டு தொடங்கிய பின்பு இந்த வழிபாட்டைச் செய்வது நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வருடக்கணக்கில் அடமானத்தில் இருக்கும் நகைகள் கூட சீக்கிரமே உங்கள் வீடு தேடி வரும். நகையை மீட்பதற்கு உண்டான வழியை அந்த பைரவர் காட்டிக் கொடுத்தார். ஆனால் விடா முயற்சி என்பது உங்கள் கையில் தான் இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -