பெண்களுடைய கைகள் இப்படி இருந்தால், வீட்டில் எப்போதுமே கஷ்டம் வராது. வீட்டை சூழ்ந்திருக்கும் கஷ்டத்தை விளக்கக்கூடிய சக்தி, இந்த கைகளுக்கு உண்டு.

hand3

பொதுவாகவே ஒரு வீடு சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான். அதே வீடு கஷ்டத்தில் இருப்பதற்கு காரணமும் சில பெண்கள் தான். ஒரு வீட்டில் நல்லது கெட்டது நடப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய சக்தி, பெண்கள் இடத்தில் தான் உள்ளது. கஷ்டமான சூழ்நிலையில் இருக்கக்கூடிய குடும்பத்தை தலை தூக்கி நிறுத்தக்கூடிய திறமையும், சக்தியையும் கொண்ட இந்த பெண்கள், தங்களுடைய கைகளை எப்படி வைத்துக் கொண்டு, எந்த முறையில் வீட்டில் பூஜை செய்தால் வீட்டில் சுபிட்சம் நிறைவாக இருக்கும் என்பதை பற்றிய சில விஷயங்களைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women1

மருதாணியை பெண்கள் தங்களுடைய கையில் இட்டுக் கொண்டால் அது அவர்களுக்கும், அவர்களுடைய வீட்டிற்கும் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த மருதாணியை அமாவாசை நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் பெண்கள் தங்களுடைய கைகளில் இட்டுக் கொள்ள வேண்டும்.

அமாவாசை தினத்திலும் பௌர்ணமி தினத்திலும் நல்ல நேர்மறையான ஆற்றல் இந்த பிரபஞ்சத்தில் பரவி இருக்கும். இந்த சமயத்தில் பெண்கள் தங்களுடைய கைகளில் மருதாணி இட்டுக் கொண்டு, அதாவது கை சிவந்த நிறத்தில் இருக்கும் போது, அந்த கைகளால் தங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்யும்போது அந்த பூஜைக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

mehandhi1

குறிப்பாக உங்களுடைய வலது கையில் ஸ்வஸ்திக் சின்னத்தினை மருதாணியில் வரைந்து கொள்ளலாம். நிறைய வடமாநிலத்தவர்கள் ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களுடைய உள்ளங்கைகளில் மருதாணியில் ஸ்வஸ்திக் சின்னம் போட்டிருப்பதை நம்மில் சிலர் பார்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த உள்ளங்கைகளில் இருக்கக்கூடிய ஸ்வஸ்திக் சின்னம் நம்மை துரத்தி வரும் கஷ்டங்களையும், நாலாபுறமும் சூழ்ந்து இருக்கும் கஷ்டங்களையும் விளக்கி விடும்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தன்று மருதாணியை அரைத்து, அந்த விழுதில் பிள்ளையார் பிடித்து, அதாவது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பது போல, இந்த மருதாணியில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து மகாலட்சுமி தேவியின் பாதங்களில் முன்பு வைத்து வழிபாடு செய்வதும் வீட்டிற்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

mehandhi

குறிப்பாக அமாவாசை பவுர்ணமி தினங்களில் பெண்களின் கைகள் மருதாணி இலைகளை பறித்து அரைத்து வைத்து, சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும். அப்படி என்றால், அமாவாசை பவுர்ணமி வருவதற்கு முந்தைய நாளில் இந்த மருதாணியை நீங்கள் உங்களுடைய கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

mehandhi

முடிந்தால் இந்த மருதாணி இலைகளோடு ஒரு லவங்கத்தை சேர்த்து அரைத்து இட்டுக் கொண்டால் வீட்டில் பண கஷ்டம் வருவதைக் குறைக்கலாம். சிவந்த அழகான லட்சுமிகடாட்சம் பொருந்திய இந்த கைகளில்  உங்களுடைய வீட்டில் அமாவாசை தினத்தன்றும் பௌர்ணமி தினத்தன்றும் தீபம் ஏற்றி பூஜை செய்து வந்தாலே கஷ்டங்கள் விலகும். லட்சுமி கடாட்சம் பெருகும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்வோம்.