இந்த ஒரு கோலத்தை உங்கள் வீட்டில் போட்டால் போதும். வரப்போகும் சோதனையில் இருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

pillaiyar
- Advertisement -

நாம் எல்லோருமே இறைவனிடம் வேண்டுவது என்ன. நம்முடைய குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டும். எதிர்பாராமல் வரவிருக்கும் சோதனைகள் எல்லாவற்றையும் நம் வீட்டில் இருப்பவர்கள் கடந்து செல்ல வேண்டும். அதற்கான மன தைரியம் வீட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டும். இப்படி குடும்பத்தில் சந்தோஷம் நிலவ, குடும்பம் சுபிட்சமாக இருக்க, நம் வீட்டில் செய்ய வேண்டிய ஒரு பூஜையை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

இந்த பூஜையை தினமும் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த நாளில் இந்த கிழமையில் தான் செய்ய வேண்டும் என்று அவசியமும் கிடையாது. உங்களுக்கு சவுகரியம் ஆக இருக்கக்கூடிய ஒருநாளில் இந்த பூஜையை செய்யலாம். அதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சரி வாங்க அந்த பூஜையை எப்படி செய்வது அந்த பூஜையில் போடப்படும் அந்த விசேஷமான கோலம் என்ன என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

விநாயகருக்கு செய்ய வேண்டிய பூஜை இது. ஸ்வஸ்திக் கோலம் தான் இதில் சிறப்பு. ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் சரிதான். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் அன்று கூட இந்த பூஜையை செய்யலாம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு சிறப்பு. காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு வழக்கம் போல வாசல் தெளித்து கோலம் போட்டு விடுங்கள். அலங்கரித்த பூஜை அறையில் விநாயகர் சிலையையோ, விநாயகர் படத்தையோ முன்னிலையில் வைத்து விட்டு, அதற்கு முன்பு சுவஸ்திக் சின்னத்தை நீங்கள் வரைய வேண்டும். பச்சரிசியால் ஸ்வஸ்திக் சின்னம் போட வேண்டும்.

பச்சரிசியை தட்டில் பரப்பி வைத்து விட்டு அதில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதை விட, பச்சரிசி மாவில் இந்த கோலத்தை போடுவதை விட, கொஞ்சமாக பச்சரிசியை எடுத்து அப்படியே தரையில், ஸ்வஸ்திக் சின்னத்தை போட்டு விடுங்கள். சுவஸ்திக் சின்னத்தை சுத்தம் செய்த தரையில் முதலில் ஒரு சாக்பீசால் எழுதி விடுங்கள். அதன் மேலே அப்படியே பச்சரிசியை கொட்டி சுவஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த சுவஸ்திக் சின்னத்துக்கு நடுவே கொஞ்சம் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துவிட்டு, பூக்களால் உங்களுக்கு தெரிந்த அலங்காரத்தை செய்து விடுங்கள். ஸ்வஸ்திக் சின்னத்திற்கு இரண்டு பக்கத்திலும் செம்பருத்தி பூ இலைகளை வைத்து அதன் மேலே மண் அகல்வினை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த அலங்காரத்திற்கு முன்பு அமர்ந்து குடும்பத்தோடு விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

உங்களுக்கு எட்டு திக்கிலிருந்து வரக்கூடிய கஷ்டங்களின் மூலம் எந்த ஒரு பெரிய ஆபத்து வந்து விடக்கூடாது. (இந்த ஸ்வஸ்திக் சின்னம் எட்டுத்திக்கை குறிக்கின்றது. நடுவில் இருக்கும் அந்த பொட்டு தான் மனிதனின் ஆன்மா.) எதிர்பாராமல் வரவிருக்கும் எந்த ஒரு சோதனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டிய மன பக்குவம் எங்களுக்கு கிடைக்க வேண்டும். எந்த கெடுதலும் எங்கள் குடும்பத்துக்கு நடக்காதபடி நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விநாயகப் பெருமானிடம் மனம் உருகி வேண்டி கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பூஜையில் ஏதாவது நெய்வேத்தியம் வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் கற்கண்டு நிவேதனமாக வைத்தாலும் சரிதான். (கூடுமானவரை இந்த பூஜையை காலை 6 மணி நேரத்தில் சிறப்பு. செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு செய்து கொள்ளுங்கள்.)

இந்த பூஜையை செய்வதன் மூலம் உங்களுடைய குடும்பத்தில் நிறைவான சுபிட்சம் கிடைக்கும். மன நிம்மதி இருக்கும். பூஜை முடிந்த பின்பு அன்றைக்கு அந்த கோலத்தை கலைக்க வேண்டாம். அடுத்த நாள் அந்த பச்சரிசியை எல்லாம் எடுத்து காக்கைக் குறைவுகளுக்கு சாப்பிட போடலாம். அப்படி இல்லை என்றால் அந்த பச்சரிசியை மாவாக அரைத்து தினமும் கோலம் போட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சின்ன பூஜை உங்கள் குடும்பத்திற்கு நிறைய நிறைய நல்லதை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -