இந்த ஒரு குறியீடு மட்டும் உங்களிடம் இருந்தால், நீங்கள் தேடும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி அதுவாகவே வருமாம் தெரியுமா? ஜாக்பாட் அடிக்க இதை கூடவே வெச்சிக்கோங்க!

swastik-cash
- Advertisement -

இவ்வுலகில் ஒவ்வொரு குறியீடு ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கின்றன. குறியீடுகளால் உருவாகின்ற மொழிகள் மனிதனின் தகவல் பரிமாற்றத்திற்கு உதவி கொண்டிருக்கின்றன. இப்படி ஒவ்வொரு குறியீட்டில் இருக்கும் அர்த்தங்கள் வியக்கத்தக்கவையாக இருக்கும். அதில் ஒரு சில குறியீடுகள் தெய்வீக அம்சத்துடன் இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஒரு குறியீடு தெய்வீகத்தையும், தெய்வாம்சத்தையும் உள்ளடக்கி இருக்கும் அற்புதமான குறியீடு ஆகும். இது எவர் ஒருவரிடம் இருந்தாலும், அவர்களுக்கு ஜாக்பாட் தான் என்கிறது ஆன்மீகம்! அப்படியான ஒரு குறியீடு நம்மிடம் எந்த வகையில்? எப்படி இருப்பது அதிர்ஷ்டம் தரும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

தெய்வீக அம்சம் பொருந்திய குறியீடுகளில் வேல், திரிசூலம், ஓம், பிறை சந்திரன் போன்றவையும் அடங்கும். அந்த வகையில் இந்த ஸ்வஸ்திக் குறியீடும் அடக்கமாகியுள்ளன. ஆண், பெண் இன பாகுபாடு இன்றி இக்குறியீடை எவர் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். இந்த ராசிக்காரர்கள் தான் ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்கிற வரைமுறையும் கிடையாது. எந்த ராசியினரும் பொதுவாக பயன்படுத்தக் கூடிய இந்த ஒரு குறியீடு வாஸ்து தோஷத்தையும் போக்குகிறது.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் சிறு சிறு வாஸ்து குறைபாடுகளுக்கு சுவஸ்திக் சின்னத்தை பயன்படுத்தலாம். வீட்டில் மதிம பகுதியில் ஸ்வஸ்திக் சின்னத்தை புதைத்து வைக்கலாம். அது போல அதற்கு நேர் எதிரே அதாவது கடிகார முள் சுற்றும் பக்கத்தில் கிழக்கு மூலையிலும் இது போல ஸ்வஸ்திக் சின்னம் ஒன்றை புதைக்க வேண்டும். புதைக்க முடியாதவர்கள், அதை ஒட்டி வைப்பதும் நல்லது. உங்கள் வீட்டில் இருக்கும் நடு ஹாலில் ஸ்வஸ்திக் சின்னம் ஸ்டிக்கராக வாங்கி ஒட்டி வைக்கலாம். அதே போல கிழக்கு திசையிலும் மத்திம பகுதியில் இருந்து கடிகாரம் சுற்றும் திசையில் வந்து ஒரு ஸ்வஸ்திக் சின்னத்தை ஒட்டி வைக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது எத்தகைய வாஸ்து குறைபாடுகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

அது மட்டுமல்லாமல் வீட்டு வாசலில் ஸ்வஸ்திக் சின்னத்தை ஒட்டி வைப்பவர்களுக்கு நோய் தாக்குதல்கள் குறையும் என்கிற நம்பிக்கையும் உண்டு. மனதில் இருக்கும் மன உளைச்சல், துக்கம், கவலை அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சி பெருக சுவஸ்திக் சின்னத்தை வீட்டின் வாசலுக்கு நேரே மேல் பகுதியில் ஒட்டி வைக்கலாம். அது மட்டும் அல்லாமல் ஸ்வஸ்திக் சின்னத்தை லாக்கெட், டாலர், மோதிரம், பிரேஸ்லெட் என்று பல வகைகளிலும் பயன்படுத்தலாம். இதனால் நமக்கு வரக்கூடிய பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களும், ஆற்றல்களும் அதிகரிப்பதால் நமக்கு வெற்றி மேல் வெற்றிகளும், அதிர்ஷ்டங்களும், யோகங்களும் வந்து சேரும்.

- Advertisement -

இந்த ஸ்வஸ்திக் சின்னம் பொறித்த பேப்பர் ஒன்றை நீங்கள் உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொண்டால் பணம் மென்மேலும் சேரும். மணி பர்சில் மட்டும் அல்லாமல் பணம் வைக்கும் கல்லாப்பெட்டி, பீரோ போன்றவற்றிலும் நீங்கள் வைக்கலாம். தொழில் செய்யும் இடங்கள், உத்தியோகம் செய்யும் இடங்கள் ,வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றிலும் ஸ்வஸ்திக் சின்னம் இருப்பது நல்லது.

அது மட்டுமல்லாமல் பூஜை அறையில் கண்டிப்பாக ஸ்வஸ்திக் சின்னம் இருப்பது தெய்வீக அலைகளை அதிகரிக்க செய்யும். ஸ்வஸ்திக் சின்னம் இறை ஆற்றலை அதிகரிக்க செய்து அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொண்டு வரக்கூடிய அற்புத குறியீடாகும் எனவே இதை எந்தெந்த வகைகளில் நீங்கள் பயன்படுத்தினாலும் அதற்குரிய யோக பலன்களை விரைவிலேயே பெறலாம்.

- Advertisement -