ஸ்வயம்வர பார்வதி மந்திரம்

sivan-1

நமது சாஸ்திரங்களில் ஒரு மனிதன் தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களில் ஒன்றாக இல்லற தர்மம் பற்றி கூறுகிறது. திருமணம் என்பது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். திருமணமானவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களுக்கு ஏற்படும் பிள்ளை பேறு. ஆனால் சிலருக்கு இவை இரண்டும் ஏற்படாமல் தடைகளும் தாமதங்களும் ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றையும் போக்கும் ஒரு மந்திரமாக இந்த “ஸ்வயம்வர பார்வதி மந்திரம்” இருக்கிறது.

sivan

ஸ்வயம்வர பார்வதி மந்திரம்

ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல

ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம்
மம வசம் ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ

பராசக்தியான பார்வதி தேவியால் பரமசிவனை மணக்க முதன்முதலில் இம்மந்திரம் பயன்படுத்தப்பட்டது என்பது ஐதீகம். சக்தியாவாய்ந்த இந்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் காயத்ரி மந்திரத்திற்கு இணையானது. இம்மந்திரத்தை காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் சிவபார்வதியை மனதில் நினைத்து துதித்து வந்தால்
அனைத்து திருமண தடைகள், தாமதங்கள் தகர்த்து, விரைவில் திருமணம் நடக்கச் செய்யும். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், தம்பதிகளிடையே அந்நியோன்யம் வளர மற்றும் குழந்தைப்பேறில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளவும் செய்யும் மந்திரம் இது.

siva-parvathi

- Advertisement -

ஆணும், பெண்ணும் உடல்ரீதியாக வேறுபடுகின்றனரே தவிர அவர்களின் ஆன்மா ஒன்று தான் என்பது ஆன்மீகத்தின் முடிவு. இல்லற வாழ்வில் ஆண், பெண் உடலால் இருவராக இருந்தாலும் உயிரில் ஒன்று கலந்து வாழ்வார்களேயானால் அவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வர தத்துவம். மனித குலத்தில் பெண்ணாக பார்வதி தேவி சிவபெருமானை கணவனாக அடைய உதவிய இந்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் துதிப்பதால் நமக்கு நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
முருகன் ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Swayamvara parvathi mantra in Tamil. It is also called Shiva parvati mantra in Tamil or Thirumanam nadakka manthiram in Tamil or Siva parvathi slokam in Tamil or Thirumanam thadaiyinri nadakka in Tamil.