குழந்தைகள் விருப்பமாக சாப்பிட இந்த மாங்காய் பச்சடி செய்து கொடுங்கள். இதில் இனிப்புச் சுவையுள்ளதால் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்

mangai
- Advertisement -

ஒரு சிலர் காரமான உணவுகளைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு காரம் குறைவாக இருந்தால் மட்டும் தான் பிடிக்கும். ஆனால் இனிப்பு சுவை என்றால் அனைவருமே விருப்பமாக்கு சாப்பிடுபவர்கள். அவ்வாறு உணவு வகையில் இவை இரண்டு சுவையும் கலந்த உணவுகள் ஒரு சில வகைகள் தான் இருக்கிறது. அவ்வாறு இந்த இரண்டு சுவையும் கலந்துள்ள மாங்காய் பச்சடி அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாகும். இதனை சுடச்சுட சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அல்லது ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த மாங்காய் பச்சடி செய்வதற்கு நேரமும் குறைவாகத் தான் செலவாகும். இதை சேர்க்கப்படும் பொருட்கள் எப்போதும் வீட்டில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்கள் வைத்தே சட்டென்று செய்திட முடியும். வாருங்கள் மாங்காய் பச்சடியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மாங்காய் – 2, வெங்காயம் – 1, தக்காளி – 1, பூண்டு – 2 பல், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், வெல்லம் – 200 கிராம், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் மாங்காயை பொடியாக நறுக்கி, தண்ணீரில் சேர்த்து அலசி வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பல் பூண்டை தட்டி வைக்க வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

பிறகு 4 ஸ்பூன் எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் பொடியாக வெட்டி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும். இவற்றுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு அடுப்பி ஒரு பேனை வைக்க வேண்டும்.

பிறகு 200 கிராம் வெல்லத்தை பொடி செய்து பேனில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நன்றாக வெந்ததும் வெல்லக் கரைசலை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவேண்டும். இவற்றுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -