வெறும் 4 பொருட்கள் போதும். பஞ்சு போல சூப்பரான புசுபுசுன்னு ஸ்வீட் அப்பம் தயார். சூப்பர் ஸ்நாக்ஸ் ரெசிபி உங்களுக்காக.

appam4
- Advertisement -

சாயங்கால வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு ஒரு இனிப்பு சேர்ந்த அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த அப்பம் செய்ய நம் வீட்டில் இருக்கும் வெறும் 4 பொருட்களே போதும். இந்த சிம்பிளான ஸ்வீட் அப்பத்தை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

appam7

இந்த அப்பம் செய்வதற்கு 1 கப் – கோதுமை மாவு, 1 கப் – மைதா, 1 கப் – ரவை, 1 கப் – சர்க்கரை, 2 சிட்டிகை உப்பு இது மட்டும் போதும். எந்த கப்பில் கோதுமை மாவை அளந்து கொள்கிறீர்களோ, அதே கப்பில், அதே அளவில் மற்ற 3 பொருட்களையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மைதா ரவை சர்க்கரை 4 பொருட்களையும் போட்டு, 2 சிட்டிகை உப்பு போட்டு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, இதை அப்ப மாவு அளவிற்கு கலந்து கொள்ள வேண்டும். (எந்த கப்பில் எல்லா பொருட்களையும் அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் 1 1/4கப் அளவு தண்ணீர் ஊற்றி மாவை கரைத்து கொண்டால் சரியாக இருக்கும். இந்த அப்பம், மாவு தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.)

appam1

கரைத்த இந்த அப்ப மாவை ஒரு மூடி போட்டு 1/2 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். 1/2 மணி நேரம் ஊரிய மாவில் கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து, நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து அதில் அப்பம் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடு செய்து கொள்ளுங்கள். எண்ணெயை மிதமான தீயில் காய்ந்த உடன் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஒரு குழிக் கரண்டியால் தயாராக இருக்கும் அப்ப மாவை எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். (எண்ணெய் ரொம்பவும் சூடாகி விட்டால், அப்பம் ஊற்றிய உடன் எண்ணெயில் பிரிந்து போய்விடும் ஜாக்கிரதை.)

- Advertisement -

அடுப்பு கட்டாயம் சிம்மில் தான் இருக்க வேண்டும். நாம் ஊற்றிய அப்பம் எண்ணெயில் இருந்து பொங்கி மேலே எழும்பி வரும். ஒரு பக்கம் வெந்ததும் அதை திருப்பி விட்டு மறு பக்கமும் சிவந்தவுடன் எண்ணெயிலிருந்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

appam6

இப்படியாக ஒவ்வொரு அப்பமாக தனித்தனியாக ஊற்றி தான் சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூப்பரான அப்பம் தயார். இந்த அப்பத்தை சுடுவதற்கு கொஞ்சம் பொறுமை தேவை. பக்குவமாக மேலே சொன்ன முறைகளை பின்பற்றி அப்பத்தை சுட்டு எடுத்து வைத்துக்கொண்டால் இரண்டு நாட்கள் ஆனாலும் இந்த அப்பம் கெட்டுப்போகாது. டப்பாவில் போட்டு வைத்து சாப்பிடலாம்.

appam8

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த அப்பத்தை நீங்கள் தேவைப்பட்டால் வெறும் மைதா மாவிலும் செய்து கொள்ளலாம். வெறும் கோதுமை மாவிலும் செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். மாவு கரைக்கும் போது தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம். பஞ்சு போல இருக்கும் புசுபுசு அப்பத்தை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -