மாத்திரைகளுக்கு நடுவே இந்தக் கோடு இருப்பதற்கு என்ன காரணம். இதுவரைக்கும் யாராவது யோசிச்சு இருக்கீங்களா?

tablets
- Advertisement -

சுவாரசியமான விஷயங்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள உங்களுக்கும் பிடிக்குமா? நம்முடைய அன்றாட வாழ்க்கையின் தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் அதிகம் இருந்தால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். முதல் சுவாரசிய தகவல். ஒரு உயிரை கொன்று, அந்த மிருகத்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோளிலிருந்து செய்யப்படுவது தான் லெதர். லெதர் பர்ஸ், லெதர் பேக், லெதர் ஷூ, லெதர் ஜாக்கெட் என்று லெதரின் மீது உள்ள மோகம் நமக்கு அதிகம்.

leather

ஆனால் உயிர்களைக் கொன்று, அதிலிருந்து தோலை எடுப்பது என்பது பாவமான செயல் அல்லவா. இதற்காக, லெதர் போலவே மிகவும் ஸ்ட்ராங்கான ஒரு மெட்டீரியலை, cactus என்று சொல்லப்படும் சப்பாத்திக்கள்ளியிலிருந்து, லெதர் பிரதர்ஸ் கண்டுபிடித்து உள்ளார்கள். சப்பாத்தி கள்ளியில் இருந்து எடுக்கக்கூடிய இந்த மெட்டீரியலும், லெதர் போலவே மிகவும் வலிமையானதாக இருக்கும். மிருகங்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்காக இவர்கள் மிக மிக கஷ்டப்பட்டு பல ஆராய்ச்சிக்கு பின்பு இதை கண்டுபிடித்து உள்ளார்கள்.

- Advertisement -

இரண்டாவது சுவாரசிய தகவல். உங்களுடைய மொபைல் ஃபோன் எப்பவாவது ஒரு சமயத்தில் ஹேங்க் ஆவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதாவது பெரிய அப்ளிகேஷன்ஸ் டவுன் லோட் செய்யும்போது, சில பெரிய கேம்களை விளையாடும் போதும், சில சமயம் நம்முடைய மொபைல் போன் ஹேங் ஆகி விடும். அந்த சமயத்தில் உங்களுடைய மொபைல் போனுக்கு சார்ஜர் போட்டு விட்டால், மொபைல் போன் உடனடியாக சரியாகிவிடும். உங்க போன் ஹேங் ஆகும் போது இத ட்ரை பண்ணி பாருங்க.

mobile-searching

மூன்றாவது சுவாரசியமான தகவல். ஏழு நாட்களில் உங்களுடைய முகம் வெள்ளையாக இத ட்ரை பண்ணி பாருங்க. தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளித்தால் 7 நாட்களில் உங்களுடைய சருமம் பளபளப்பாகும். உப்பில் கிளின்சிங் தன்மை அதிகமாக உள்ளது. இது உங்களுடைய உடம்பில் இருக்கக்கூடிய டெல் செல்சை நீக்கக்கூடியது. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

நான்காவது சுவாரசியமான தகவல். பூமியில் ஒரு நாள் என்பது, 24 மணி நேரம். இதுவே மெர்குரி பிளானடில் ஒரு நாள் என்பது 1408 மணி நேரமாம். அடேங்கப்பா!

google

ஐந்தாவது சுவாரசியமான தகவல். கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் வேலையாட்களுக்கு, கூகுள் நிறுவனம் தரக்கூடிய சலுகைகள் என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா. கூகுளில் பணிபுரியும் ஒரு நபர், வேலையில் இருக்கும் போதே இறந்து விட்டால், அந்த நபரின் மனைவிக்கு அவருடைய சம்பளத்திலிருந்து பாதி சம்பளம் மாதம் மாதம் பென்ஷனாக கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இறந்த அந்த நபருக்கு 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தைகளுக்கு மாதம்தோறும் 1000 டாலர்கள் தனியாக கொடுக்கப்படுகின்றது. கூகுள் நிறுவனம் போலவே மற்ற நிறுவனங்களும் இருந்துவிட்டால் கவலையே இல்லை.

- Advertisement -

eating

ஆறாவது சுவாரசியமான விஷயம். இந்த உலகத்தில் இருக்கும் எந்த பாலூட்டி உயிரினத்தின் மூலமும் சாப்பிடும் போது மூச்சை உள்வாங்கவும் முடியாது, வெளி விடவும் முடியாது. ஆனால் மனிதனும் ஒரு பாலூட்டி இனம் தான். ஆனால் மனிதனால் மட்டும்தான் சாப்பிடும் போது மூச்சை உள்வாங்கவும் வெளியிடவும் முடிகின்றது.

animals

ஏழாவது சுவாரசியமான தகவல். நம்மில் பலபேர் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளில் நடுவே ஏன் கோடு போட்டு உள்ளது. சில மாத்திரைகள் ஏன் கேப்ஸ்யூல் மாத்திரைகளாக கொடுக்கப்படுகிறது. சில மாத்திரைகள் ஏன் நடுவே கோடு போடாமல் இருக்கிறது?

நீங்கள் சாப்பிடக்கூடிய மாத்திரை 100 mg என்ற கணக்கில் இருந்தால், கோடு போட்ட மாத்திரையில் 50mg வலப்பக்கமும் 50mg இடப்பக்கமும் இருக்கும். இந்த கோடுபோட்ட மாத்திரைகளை தான் Adjustable tablet என்று சொல்லுவார்கள். இப்படி கோடு போட்ட மாத்திரையை தான் பாதியாக உடைத்து நாம் சாப்பிட வேண்டும். கோடு போடாத மாத்திரைகளை நம்மால் உடைத்து சரியான கணக்கில் உள்ளுக்கு சாப்பிட முடியாது. சாப்பிடவும் கூடாது. கோடு போடாத மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவது அவ்வளவு சரியான முறை அல்ல. இதற்காகத்தான் மாத்திரைகளில் நடுவே கோடு போடப்பட்டுள்ளது.

tablets1

நாம் சாப்பிடும் மாத்திரை வகைகளில் கேப்சூல் வகையான மாத்திரைகள் உண்டு. கேப்சூல் என்று மாத்திரையின் மேலே போடப்படும் கவர், ஜெலட்டின் ஆல் செய்யப்பட்டது. இந்த கேப்ஸ்யூல் மாத்திரைகளிலும் இரண்டு வகை உண்டு. பிளாஸ்டிகில் இருக்கக்கூடிய கேப்ஸ்யூல், ரப்பர் வகையில் இருக்கக்கூடிய கேப்ஸ்யூல், இரண்டுமே ஜெலட்டின் வகைதான்.

tablets2

ஆனால் பிளாஸ்டிக் வகைகளில் பவுடர் போன்ற மருந்து வகைகள் அடைக்கப்பட்டிருக்கும். அதாவது மேலே ஒரு கேப்ஸ்யூல் மூடி, கீழே ஒரு கேப்ஸ்யூல் மூடி போட்டு உள்ளே மருந்து பவுடரை வைத்து இருப்பார்கள். ரப்பர் போன்ற கேப்ஸ்யூல் உள்ளே லிக்விட் மருந்து அடைக்கப்பட்டிருக்கும். ஏன், இந்த மருந்துகளை மாத்திரையாகவே தயாரித்து கொடுக்க கூடாது? ஏன் கேப்ஸ்யூலில் போட்டு கொடுக்கின்றார்கள்?

tablets3

இதற்கும் காரணம் உண்டு. மாத்திரைகள் நம் உடலுக்குள் சென்று கரைந்து வேலை செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் கேப்ஸ்யூல் அப்படி கிடையாது. நம் வயிற்றுக்குள் சென்ற உடனேயே கரைந்து தனது வேலையைத் தொடங்கி விடும். உடலுக்கு சென்று உடனடியாக வேலை செய்ய வேண்டும் என்ற மருந்து வகைகளை கேப்ஸ்யூல் ஆகத்தான் கொடுப்பார்களாம். இது போன்ற சுவாரசியமான தகவல்களை உங்களுக்கு தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் தொடர்ந்து எங்களுடைய பதிவுகளை படியுங்கள்.

- Advertisement -