இயற்கை எழில் கொஞ்சும் அழகிய முகமும், அலைபாயும் கூந்தலையும் பெற உங்களுக்குத் தெரியாத ரகசிய குறிப்புகள் 12!

egg-white-papaya-face
- Advertisement -

சினிமா ஹீரோயின் போல இருப்பதற்கு எல்லோருக்கும் ஆசை தான் ஆனால் நிஜ சினிமா ஹீரோயின் கூட மேக்கப் போடவில்லை என்றால் நம்மால் பார்க்க முடியாது. எப்பொழுதும் செயற்கையை விட, இயற்கையே நமக்கு அழகை அள்ளிக் கொடுக்கும். அத்தகைய முத்தான 12 குறிப்புகள் உங்களுக்காக இதோ! யாருக்கும் தெரியாத அற்புதமான இந்த அழகு குறிப்புகள் உங்களை எப்படி ஜொலிக்க வைக்க போகிறது தெரியுமா?

டிப்ஸ் 1:
முகத்தில் இருக்கும் கருமை நீங்கி செக்க செவேலென உங்கள் பழைய நிறம் திரும்ப பெறுவதற்கு தக்காளி பழங்களை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். அதே போல முகத்திலும் தடவி உலர விட்டு கழுவினால் நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -

டிப்ஸ் 2:
முட்டையின் வெள்ளைக்கருவுடன், அரை மூடி எலுமிச்சை சாறு, அரைத்த பாதாம் விழுது ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பேக் போட்டு 20 நிமிடம் கழித்து, சோப் போட்டு கழுவி வந்தால் விரைவில் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் சுத்தமாக மறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்

டிப்ஸ் 3:
மருந்து கடைகளில் கிடைக்கும் சுத்தமான ஆலிவ் எண்ணெய்யை வாங்கி தேவையான அளவிற்கு அவ்வபோது கொதிக்க வைத்து பின்னர் ஆறியவுடன் தலையில் தடவி வர கூந்தல் பட்டுப் போல பளபளவென மின்னும்.

- Advertisement -

டிப்ஸ் 4:
தலைமுடிக்கு ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை தவிர வேறு எந்த எண்ணையையும் பயன்படுத்தாமல் இருந்தால் முடி கரு கருவென நீளமாக வளர ஆரம்பிக்கும்.

டிப்ஸ் 5:
உங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற ஊளைச் சதையை கரைக்க தினமும் கொஞ்சம் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரலாம்.

- Advertisement -

டிப்ஸ் 6:
வலியுடன் கூடிய பருக்களுக்கு எருமைப் பால் ஆடை நல்ல மருந்தாக செயல்படும். இரவு தூங்கும் பொழுது எருமைப் பால் ஆடையை எடுத்து பருவின் மீது தடவிக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் பரு வலி இல்லாமல் இருக்கும், பின் அதுவாகவே மறைந்துவிடும்.

டிப்ஸ் 7:
பனிக்காலத்தில் ஏற்படும் வெடிப்புகளுக்கு வாஸ்லின் தடவினால் நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும்.

டிப்ஸ் 8:
‘கண்ணுக்கு மை அழகு’ என்று கூறுவார்கள். தினமும் கண் மை பூசி கொள்பவர்கள், இரவில் முகத்தை அலம்பிவிட்டு படுக்க செல்வதே நல்லது. இல்லையேல் கண்கள் பாதிக்கப்படும்.

டிப்ஸ் 9:
சிலருக்கு திடீரென முகத்தில் தோல் உரிய ஆரம்பிக்கும். அது போல் தோல் உரிந்தால் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, கிளிசரின் ஆகியவற்றை கலந்து தோல் உரியும் இடத்தில் பூசி வந்தால் எளிதாக உரிந்து வந்துவிடும்.

டிப்ஸ் 10:
இதய நோயாளிகள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர மற்ற அனைவரும் தேங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் முகத்தில் மற்றும் தலையில் ஏற்படும் வறட்சி இல்லாமல் ஈரப்பதத்துடன் பாதுகாக்கும். தோல் பளபளவென்று மின்னும்.

டிப்ஸ் 11:
சோப்பிற்கு பதிலாக தலைக்கு தேய்க்கும் சீயக்காய் அல்லது பயத்தம் மாவு கொண்டு முகத்தை மட்டும் கழுவி வந்தால் நாளடைவில் முகம் மாசு, மருவில்லாமல் ஜொலிக்கும்.

டிப்ஸ் 12:
இரவு தூங்கும் பொழுது கொஞ்சம் விளக்கெண்ணையை புருவத்தில் பூசிக் கொண்டு, முகத்தில் கற்றாழை ஜெல்லுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை கலந்து பூசி படுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்து வர நீங்களும் ஹீரோயின் ஆகலாம்.

- Advertisement -