இன்றைய தினம் தமிழ் வருடப்பிறப்பு பிறந்து இருக்கிறது. இந்த நாளை அனைவரும் நல்லபடியாக வரவேற்று, பூஜை செய்து கொண்டாடி வருகின்றோம். பல பேர் வீட்டில் இன்று காலையில் சிறப்பாக வழிபாட்டை செய்து முடித்திருப்பீர்கள். கனி காணும் நிகழ்ச்சியும், சிறப்பாக நடந்திருக்கும். இந்த இனிய நாளை போலவே, இந்த வருடம் முழுவதும் அனைவருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் நீடிக்க வேண்டும் என்று அந்த இறைவனையும், குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவிற்குள் பயணிப்போம்.
இன்றைய தினம் அனைவரும் கனி காணும் நிகழ்ச்சியில் அவரால் முடிந்த ஒரு ரூபாய் நோட்டை ஆவது, வைத்து வழிபாட்டை மேற்கொண்டிருப்போம். அப்படி இல்லை என்றால் சில்லறை நாணயங்களையாவது பூஜை அறையில் கண்ணாடி முன்பு வைத்திருப்போம். எல்லோர் வீட்டிலும் தாம்பூல தட்டில் அந்த நாணயங்கள் இப்போதும் இருக்கும் அல்லவா. அந்த நாணயங்களையோ அல்லது ரூபாய் நோட்டையோ வைத்து தான் இந்த பரிகாரம் செய்ய போகிறோம்.
இன்று இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் இந்த வருடம் முழுவதும் எந்த சூழ்நிலையிலும் எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ளவே மாட்டீர்கள். அதாவது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் சரி, நேரமும் காலமும் கிரக சூழ்நிலையும், தசா புத்தியும் சரியில்லை என்றால், அவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தானாக வீடு தேடி வரும். ஒரு நொடி பொழுதில் கோடீஸ்வரர் கீழே வந்து விடுவான். அந்த மாதிரி ஒரு சூழ்நிலை நமக்கு வரவே கூடாது என்றால், என்ன செய்வது.
ஒரு சின்ன உண்டியல் எடுத்து உங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். இது குலதெய்வத்திற்கான உண்டியல். இந்த உண்டியலில் போடும் பணத்தை குலதெய்வ கோவிலில் கொண்டு போய் தான் சாத்த வேண்டும். இன்று பூஜை அறையில் வைத்த பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் 11 ரூபாய் எடுத்துக் கொண்டாலும் போதும். அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வேண்டும் என்றாலும் அந்த உண்டியலில் போடலாம். அது உங்கள் விருப்பம்.
தமிழ் வருட பிறப்பு ரூபாய் நோட்டு பரிகாரம்
இன்று தமிழ் புத்தாண்டு அன்று பூஜை செய்த அந்த பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து, அந்த உண்டியலில் செலுத்த வேண்டும். இந்த உண்டியல் கட்டாயம் உங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் தான் இருக்க வேண்டும். இதேபோல உங்களுக்கு எப்போதெல்லாம் வருமானம் வருகிறதோ, எப்போதெல்லாம் சம்பளம் வருகிறதோ, எப்போதெல்லாம் லாபம் கொண்டு வருகிறீர்களோ, அப்போதெல்லாம் ஒரு சின்ன தொகையை இந்த உண்டியலில் சேருங்கள்.
உண்டியல் நிறைவடைந்த உடன் இந்த உண்டியலை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் செலுத்தி விட்டு வர வேண்டும். இதை காணிக்கையாக குலதெய்வத்திற்கு போட்டு வேண்டிக்கொண்டு வந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையில் பணப்பிரச்சனை வரும்போதும், குலதெய்வம் உங்களுடனே இருந்து, உங்களை காப்பாற்றி விடும்.
இதையும் படிக்கலாமே: சித்திரை 1 சிவன் பாடல்
பண பிரச்சனையில் அதல பாதாளத்தில் விழவே மாட்டீங்க. இது ஒரு எளிய பரிகாரம் தான். இன்று முதல், இந்த தென்மேற்கு மூலையில் குலதெய்வத்திற்கு பணம் சேர்க்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் பெரிய அளவில் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.