வீட்டில் பிரட் மட்டும் இருந்தால் போதும்! சட்டென 10 நிமிடத்தில் இப்படி ஒரு பிரட் சில்லி செய்து அசத்தலாமே?

bread-chilli-recipe
- Advertisement -

விதவிதமான டிபன் வகைகள் செய்து கொடுத்தாலும், இந்த பிரட் ரெசிபிக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இனிப்பும், காரமும் கலந்த இந்த பிரட் சில்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய இருக்கிறது. காலையில் எழுந்ததும் என்னடா செய்வது? என்று இனி யோசிக்கவே வேண்டாம்! வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த பிரட் சில்லி உங்களுடைய ஃபேவரட் ஆக மாற அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

bread2

பிரட் சில்லி செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் – 8, நெய் – 2 டேபிள் ஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், இஞ்சி துருவல் – அரை டீஸ்பூன், பூண்டு துருவல் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, நறுக்கிய குடைமிளகாய் – அரை கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, வெங்காயத்தாள் – சிறிதளவு.

- Advertisement -

பிரட் சில்லி செய்முறை விளக்கம்:
முதலில் பிரஷ்ஷான பிரட் 8 துண்டுகள் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சதுர வடிவில் துண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பெரிய அளவிலான சதுரங்களாக வெட்டுவது நல்லது. அப்பொழுது தான் நீங்கள் பிரட்டும் பொழுது உடையாமல் இருக்கும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் அல்லது வெண்ணெய் ஏதாவது ஒன்றை சேர்த்து காய விடுங்கள். அதில் நீங்கள் வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு ஒரு ஐந்து நிமிடம் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். அதன் ஈரப்பதம் போய் மொறுமொறுவென்று ஆகிவிடும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து தனியாக ஒரு தட்டில் பிரட் துண்டுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

breadpodimas

பின்னர் அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். பின்னர் அதில் இஞ்சித் துருவல் மற்றும் பூண்டு துருவலை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பூண்டை பொடிப் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம். அல்லது இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மீடியம் அளவில் 2 பச்சை மிளகாய்களை எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக வதக்கியதும், ஒரு கொத்து கறிவேப்பிலை, பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் அதிகம் வதங்க கூடாது. கண்ணாடி பதம் வரும் வரை வதங்கியதும் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பை கொஞ்சமாக தூவி வதக்க வேண்டும். பிரெட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் எனவே நீங்கள் வெங்காயம், தக்காளி வதங்கும் அளவிற்கு உப்பு சேர்த்தால் போதும், அதிகம் சேர்க்க தேவையில்லை. தக்காளி மசிய வதங்கி வந்ததும், அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

chilli-idli1

இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, மசாலா எல்லாம் ஒன்றாக சேர்ந்து எண்ணெய் தெளிய வதக்க வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து மசாலாக்கள் அனைத்தும் பிரட்டிற்குள் இறங்கும்படி நன்கு பிரட்டி விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு பிரட்டி பின்பு நறுக்கிய கொத்தமல்லி தழை அல்லது வெங்காயத்தாள் கொஞ்சம் பொடி பொடியாக நறுக்கி தூவி பரிமாறலாம். ரொம்பவே சூப்பரான சுவையைக் கொண்டிருக்கும் இந்த பிரட் சில்லியை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -