உங்க வீட்டில பிரட் இருக்கா? அப்படின்னா இப்படி ஒரு முறை செஞ்சி தான் பாருங்களேன், ஆரோக்கியம் தரும் பிரட் ரெசிபி!

bread-toast
- Advertisement -

எல்லோருக்குமே பிரட் ரெசிபி என்றால் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். வெறும் பிரெட்டை கூட வீட்டில் நாம் விட்டு வைப்பது இல்லை. ஒரு சிலருடைய வீடுகளில் பிரட் எப்போதும் இருக்கும். ஆனால் இன்னொரு புறம் யாருக்காவது உடம்பு சரி இல்லை என்றால் மட்டுமே வாங்கி வைப்பார்கள். பிரட்டில் ஆரோக்கியம் தரும் இந்த ரெசிபி குழந்தைகளுக்கு நிச்சயம் விருப்பமானதாக இருக்கும். தினமும் ஒரே டிபன் வகை செய்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு, இந்த பிரட் ரெசிபி காலையில் ஆரோக்கியம் தரும் உணவாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

bread

பிரட் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் – 12, வெண்ணெய் – தேவையான அளவு, ஃப்ரூட் ஜாம் – தேவையான அளவு, ஏலக்காய் – 4, சர்க்கரை – கால் கப், கேரட் – ஒன்று, பேரிச்சம் பழம் – 10, முந்திரி – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் – இரண்டு கப்.

- Advertisement -

பிரட் ரெசிபி செய்யும் முறை விளக்கம்:
பிரெட் துண்டுகளை பேக்கரியில் வாங்குவது நன்றாக இருக்கும். வாங்கிய பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் ஒரு புறம் வெண்ணையையும், மறுபுறம் ஃப்ரூட் ஜாமையும் தடவிக் கொள்ளுங்கள். தேங்காயை 2 கப் அளவிற்கு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பேரீச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். முந்திரிப் பருப்புகளையும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

bread-jam

பின்னர் கேரட்டை கழுவி பூப்போல பொடியாகத் துருவி வைத்துக் கொள்ளுங்கள். பி‌ன் ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவிற்கு சர்க்கரை மற்றும் அதனுடன் நான்கு ஏலக்காய்களை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்து வந்ததும் அதில் முதலில் முந்திரி பருப்புகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்கவும்.

- Advertisement -

பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும். கேரட் நன்கு வதங்கியதும் துருவி வைத்துள்ள தேங்காய் பூவை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து கொள்ளவும். பின்னர் பொடித்து வைத்துள்ள சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்த கலவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பேரீச்சம் பழங்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். தேங்காய் சேர்த்ததும் அடுப்பை எரிய விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

bread-jam1

பின்னர் 12 பிரட் துண்டுகளில் 6 பிரட் துண்டுகளை மட்டும் ஒவ்வொன்றாக எடுத்து இந்த கலவையை வைத்து இன்னொரு பிரட்டை எடுத்து மூடி வைக்க வேண்டும். பர்கர் போல செய்து பின்னர் உங்களிடம் பிரட் டோஸ்டர் இருந்தால் அதில் வைத்து ஒன்றிரண்டு நிமிடம் அடுப்பில் காண்பித்து ஒரு புறமும் டோஸ்ட் செய்ய வேண்டும். டோஸ்டர் இல்லாதவர்கள் கடாய் ஒன்றில் லேசாக நெய் தடவி ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மூடி வைத்து வேக விடலாம். ஒரு புறம் வெந்ததும் இன்னொரு புறம் வைத்து வேக விடவும். அவ்வளவு தான் ரொம்ப ரொம்ப ஈசியான பிரட் பர்கர் தேங்காய் பன் போல சூப்பரான சுவையில் தயாராகி விட்டிருக்கும். நீங்களும் இதே முறையில் ஒருமுறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -