ஆரோக்கியம் மிகுந்த க்ரீமியான மஸ்ரூம் சூப் செம்ம டேஸ்டியாக ரிச் ஸ்டைலில் செய்ய வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் போதுமே!

mushroom-soup
- Advertisement -

பொதுவாக வெஜிடபிள் சூப்பை விட மஷ்ரூம் சூப் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காளானை துண்டு துண்டாக வெட்டி சூப் போல இந்த மழை கால நேரத்தில் சுடசுட குடித்தால் வருகின்ற நோய் கூட நம்மை நெருங்காமல் ஓடி சென்று விடும். அந்த அளவிற்கு ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த க்ரீமியான மஷ்ரூம் சூப் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக எப்படி செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

mushroom1

க்ரீமியான மஷ்ரூம் சூப் செய்ய தேவையான பொருட்கள்:
மஸ்ரூம் – 500 கிராம், பூண்டு பற்கள் – 7, பெரிய வெங்காயம் – ஒன்று, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

க்ரீமியான மற்றும் சூப் செய்முறை விளக்கம்:
முதலில் 500 கிராம் மஷ்ரூமை நன்கு தண்ணீரில் ஒரு முறை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள் கொஞ்சம் போட்டு பின்னர் காளானை அதில் போட்டு வைத்து விடுங்கள். கிருமிகள் ஏதேனும் இருந்தால் அந்த சுடு தண்ணீரில் அவை மடிந்து விடும். பின்னர் அவற்றை வடிகட்டி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

mushroom_3

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெண்ணெயை உருக்கி கொள்ளுங்கள். வெண்ணை தான் சூப் செய்வதற்கு மிகவும் முக்கியமான பொருள். அதன் மணமும், திடமும் க்ரீமியான சூப் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். பின்னர் அதில் ஏழு பூண்டு பற்களை தோலுரித்து பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். பூண்டு பற்களை வதக்கும் பொழுது நீங்கள் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீள நீளமாக மெல்லியதாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பூண்டும், வெங்காயமும் நன்கு வதங்கிய பின்பு வெட்டி வைத்துள்ள காளான் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் தண்ணீரை தெளித்து மூடி வைத்து விடுங்கள் ஐந்து நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். காளான் வெந்து வர தண்ணீர் எல்லாம் வற்றிய பின்பு அவற்றை அப்படியே அடுப்பை அணைத்து விட்டு ஆற விட வேண்டும். இந்த பொருட்கள் அத்தனையும் நன்கு ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கால் பாகம் அளவிற்கு காளானை எடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு மீதியை ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

mushroom-soup1

பின்னர் அதே வாணலியில் நீங்கள் அரைத்து வைத்த இந்த கலவையை ஊற்றி கொதிக்க விட வேண்டும். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு, தேவையான பதத்தில் தண்ணீரையும் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் இவை நன்கு கொதித்து வரும் பொழுது நீங்கள் தனியாக எடுத்து வைத்துள்ள காளான் துண்டுகளை சேர்த்து விட வேண்டும். பின்னர் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப மிளகு தூள் சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் நறுக்கிய மல்லித்தழைகளை தூவி அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாற வேண்டியது தான். அற்புதமான சுவை மிகுந்த இது ஆரோக்கியம் நிறைந்த காளான் சூப்பை இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -