எப்போதும் இட்லி, தோசையை ஒரே மாதிரியாக செய்து சாப்பிடாமல், இப்படி ஒருமுறை ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்து ருசித்து பாருங்கள். இனி அடிக்கடி உங்கள் வீட்டில் இதை தான் சமைப்பீர்கள்

uthappam
- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இட்லி, தோசையே அதிகமாக செய்வது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு வழக்கமாக மாறி விட்டது. ஆனால் இட்லி, தோசையை சற்று வேறுவித சுவைகளிலும் செய்ய முடியும். அவ்வாறு ஒரு சில வீடுகளில் ஊத்தாப்பம், வெங்காய தோசை, ரவா தோசை என விதவிதமாக செய்து கொடுப்பார்கள். இப்படி வித்தியாசமான தோசையில் ஒரு வகைதான் இந்த ஜவ்வரிசி ஊத்தப்பம். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் முக்கியமாக குழந்தைகள் இந்த உணவை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ஜவ்வரிசி ஊத்தாப்பத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 4 கப், வெங்காயம் – 2, உளுந்து – ஒரு கப், கடுகு – ஒரு ஸ்பூன், ஜவ்வரிசி – கால் கிலோ, கேரட் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, எண்ணெய் – 5 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 4 கப் இட்லி அரிசி மற்றும் ஒரு கப் உழுந்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனை இரண்டு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி, தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் மறுபடியும் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும். பிறகு மறுநாள் கால் கிலோ ஜவ்வரிசியை நன்றாக கழுவி, சுத்தம் செய்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஊற வைத்த ஜவ்வரிசியை புளிக்க வைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் கேரட்டை பூ போல துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

கடாய் சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவற்றை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, தடிமனாக தோசை போல் ஊற்ற வேண்டும்.

- Advertisement -