இப்படி மசாலா சேர்த்து ஒருமுறை லெமன் சாதம் செய்து பாருங்கள். எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று கூடுதல் சுவையில் இருக்கும்

lemon
- Advertisement -

இனிமேல் பள்ளிகள் துவங்க ஆரம்பித்து விட்டன. இதனால் பிள்ளைகளுக்கு மதிய உணவு தயாரிக்கும் வேலையும் தொடங்கிவிட்டது. தினம் தினம் புதிதாக என்ன சமைக்க வேண்டும் என்று முதல் நாளே மறுநாள் மதிய உணவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வைக்க வேண்டும். அவ்வாறு லஞ்ச் பாக்ஸிற்க்கு ஏற்ற ஒரு சாதம் என்றால் அதில் ஒன்றுதான் லெமன் சாதம். லெமன் சாதம் அனைவரது வீட்டிலும் சுலபமாக செய்யப்படுகிறது. ஆனால் எப்பொழுதும் செய்யும் சுவையை விட இவ்வாறு மசாலா அரைத்து, சேர்த்து ஒரு முறை செய்தால் இதன் சுவை சற்று கூடுதலாக, அசத்தலாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி அதிகப்படியான சுவையில் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

cooker-tomato-rice1

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம் – 2, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 3, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், பெருங்காயம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
இரண்டு டம்ளர் சாதத்தை எப்பொழுதும் போல வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து, பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிய துண்டு இஞ்சி, 3 பச்சைமிளகாய், 5 பல் பூண்டு இவற்றை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

rice

பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, 7 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம் மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும். இவை அனைத்தும் பொரிந்ததும் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். கடலைப் பருப்பு நன்றாக சிவந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை எண்ணெயில் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வதக்க வேண்டும். இந்த மசாலா எண்ணெயில் நன்றாக வதங்கி, பச்சை வாசனை மறைந்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

lemon-rice1

பிறகு அடுப்பை அனைத்துவிட்டு, இருக்கும் அந்த சூட்டிலேயே எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை இதில் சேர்த்து அனைத்தையும் நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்தையும் நன்றாக கலந்துவிட்டு பரிமாறி கொடுத்துப் பாருங்கள். இதன் சுவை இதுவரையிலும் நீங்கள் செய்த லெமன் சாதத்தை விட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

- Advertisement -