மிக்ஸியிலேயே இப்படி ஒருமுறை மெதுவடை செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காது, ஹோட்டலில் கொடுப்பது போல புஸ்சுன்னு இருக்கும்!

methuvadai-mixie
- Advertisement -

மெதுவடை என்றாலே உளுந்து சேர்த்து பொதுவாக செய்வது உண்டு. ஆனால் மிக்சியில் அரைத்தால் கூட ரொம்பவே சுவையாகவும், ஹோட்டலில் கொடுப்பது போல குண்டு குண்டு வடையாக புஸ்சென்று வருவதற்கும் கொஞ்சம் கடலை பருப்பை சேர்த்து இப்படி ஒருமுறை அரைத்து பாருங்கள். கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத மற்றும் அலாதியான ருசியுள்ள இந்த மெது வடையை நாமும் எப்படி வீட்டிலேயே எளிமையாக தயாரிப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மெதுவடை செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – ஒரு கப், கடலைப்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 7, இஞ்சி – ஒரு விரல் நீளம், மிளகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – ஒன்று,

- Advertisement -

மெதுவடை செய்முறை விளக்கம்:
முதலில் உளுந்து மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக அலசி சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வடைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்ந்த மிளகாய், ஊற வைத்த கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள். கடலைப் பருப்பு சேர்க்கும் போது கூடுதலான ருசியை பெறலாம்.

பின்னர் அதனுடன் ஊற வைத்த உளுந்து சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொண்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக வடைக்கு உளுந்த மாவு அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்கக் கூடாது. தேவையான பொழுது தண்ணீரை லேசாக தெளித்து தெளித்து தான் ஆட்ட வேண்டும். எதே போல தெளித்து தெளித்து மாவு பொங்கி வெண்ணை போல வர அரைக்கவும். மாவு அரைந்து வந்ததும் எடுத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கெட்டியாக இருக்கும் மாவை கைகளால் நன்கு அடித்து கொடுங்கள். அப்போது தான் மாவு நன்கு தளர்வாகவும். இப்போது தோலுரித்து பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை, ஒன்றிரண்டாக இடித்த மிளகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். விரும்பியவர்கள் தேவைப்பட்டால் கொஞ்சம் பெருங்காய தூள் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அதனை தவிர்த்து விடுங்கள். இப்போது ஒருமுறை உப்பின் அளவை சரி பார்த்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மாவை ஒவ்வொரு உருண்டைகளாக உருட்டி எடுத்து கைகளில் வடை போல தட்டிக் கொள்ளுங்கள். நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் இட்டு இருபுறமும் நன்கு வேக சிவக்க எடுத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான். ரொம்பவே அலாதியான சுவையை கொடுக்கும் இந்த மெதுவடையை இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -