சுவையான முருங்கைக்கீரை பருப்புசாதத்தை இவ்வாறு ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்

murungai
- Advertisement -

இப்பொழுதுள்ள குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி வாய்க்கு ருசியாக உணவு வேண்டும் என்கிறார்களே தவிர, அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் அதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தோமென்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இவ்வாறு விதவிதமாக சாப்பிடுவதில் குறை ஒன்றும் கிடையாது. ஆனால் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவு வகைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு அதிக புரதச் சத்தும், இரும்புச் சத்தும் இருக்கும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலிற்கு மிகவும் நன்மையளிக்கிறது. இவ்வாறு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அள்ளித் தரும் முருங்கைக் கீரையை வைத்து செய்யும் ஒரு பருப்பு சாதத்தை எவ்வாறு ருசியாக செய்வது என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cooker-tomato-rice

முருங்கைக் கீரை பருப்பு சாதம் செய்முறை:
முதலில் இரண்டு கைப்பிடி முருங்கைக் கீரையை உருவி சுத்தமாக தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 3 பச்சை மிளகாய் மற்றும் 2 வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் 7 பல் பூண்டை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு குக்கரில் ஒரு டம்ளர் அரிசி , அரை டம்ளர் பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். அதன்பின் இவற்றுடன் 5 தம்ளர் தண்ணீர் சேர்த்து, அடுப்பை பற்ற வைத்து, குக்கரை அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

pasiparupu

பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் சீரகம், முக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். சிறிது நேரத்தில் சாதம் நன்றாக கொதிக்க ஆரம்பித்து ஒரு பங்கு வெந்து வந்ததும், அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை இதனுடன் சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் குக்கர் 2 விசில் வரும்வரை சாதத்தை வேக வைக்க வேண்டும். அதன் பிறகு குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, மீண்டும் அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். நெய் நன்றாக சூடானதும் பத்து முந்திரியை சேர்த்து முந்திரி நன்றாக சிவந்து வரும் வரை வறுத்து கொண்டு, இதனை குக்கரில் உள்ள சாதத்துடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

keerai-sadham1

பின்னர் இந்த சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதேனும் கிழங்கு வகை பொரியலை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அப்பளம், வத்தல் மற்றும் முட்டை வறுவல் இவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும், சூப்பராகவும் இருக்கும். குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -