சுவையான பூண்டு மிளகு சாதத்துடன் தொட்டுக் கொள்ள இந்த உருளைக்கிழங்கு மிளகுவறுவலையும் சேர்த்து செய்து பாருங்கள்

milagu
- Advertisement -

என்னதான் விதவிதமாக கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் மழை காலத்தில் வீட்டில் சட்டென சுடச்சுட செய்து கொடுக்கும் சில உணவுப் பொருட்களை வீட்டில் இருக்கும் அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு அவசர அவசரமாகவும் மிகவும் எளிமையாகவும் செய்யக்கூடிய இந்த பூண்டு மிளகு சாதத்தையும் அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவலையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thakkali sadham

பூண்டு மிளகு சாதம் செய்யும் முறை:
முதலில் சாதத்தை எப்பொழுதும் போல இல்லாமல் முக்கால் பங்கு வெந்ததும் வடித்து வைக்க வேண்டும். பின்னர் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு 20 பல் பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

அதன்பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து, இவை நன்றாக சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்புமற்றுமம் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

onion

அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின் வடித்து வைத்துள்ள சாதத்தை இதனுடன் சேர்த்து இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மிளகு பூண்டு சாதம் ரெடியாகிவிட்டது.

- Advertisement -

உருளைக்கிழங்கு மிளகு வறுவல்:
முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அதில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், 4 வர மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு, அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

potato-urulai

கால் கிலோஉருளைக்கிழங்ககை நீளவாக்கில் அரிந்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொண்டு அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைக்கவேண்டும். உருளை கிழங்கு முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை அ0னைத்து உருளைக் கிழங்கை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

potato-urulai

பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பொடி செய்து வைத்துள்ள மசாலாவையும் இதனுடன் சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும். அடுப்பினை சிறிய தீயில் வைத்துக் கொண்டு சற்று இடைவெளி விட்டு விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் சுவையான மிளகு உருளைக்கிழங்கு தயாராகிவிட்டது. பூண்டு மிளகு சாதத்துடன் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவலையும் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். இதன் சுவை அப்படியே உங்கள் நாவில் ஒட்டிக்கொள்ளும்.

- Advertisement -