உருளைக்கிழங்கு வட்ட வறுவல் இப்படி செஞ்சா ஒரு குண்டான் சாப்பாடு கூட சலிக்காம சாப்பிட்டுகிட்டே இருக்கலாமே!

potato-round-fry
- Advertisement -

மணக்க மணக்க உருளைக்கிழங்கு வறுவல் ருசிக்க ருசிக்க சாப்பிட வேண்டும் என்றால் அதனை இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க. உருளைக் கிழங்கு என்றாலே எல்லோருக்கும் ஒரு தனி விருப்பம் தான். உருளைக்கிழங்கு வாய்வு என்றாலும் அதில் பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து செய்வதால் வாய்வை எடுத்துவிடும். எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள இப்படி ஒரு உருளைக்கிழங்கு வறுவலை நீங்களும் செய்து பாருங்கள், சுவையான உருளைக்கிழங்கு வட்ட வறுவல் சுலபமாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, உருளைக்கிழங்கு – 5, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை விளக்கம்:
ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 5 என்ற எண்ணிக்கையில் முதலில் எடுத்து தோலுரித்து வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வறுவல் போல செய்தால் அதன் சுவை அபாரமாக இருக்கும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்து நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.

பருப்பு வகைகள் பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் வட்ட வட்டமாக வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் நன்கு எண்ணெயில் போட்டு பிரட்டி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். ஆவியில் வேக வைப்பதால் அடி பிடிக்காது. நன்கு உருளைக் கிழங்கு முக்கால் பதம் வெந்து வரும் வரை காத்திருங்கள். முக்கால் பதத்திற்கு உருளைக்கிழங்கு வெந்ததும் உருளைக்கிழங்குக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகுத் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை முறையே ஒவ்வொன்றாக சேர்த்து வாருங்கள். அனைத்தையும் சேர்த்த பின்பு நன்கு வதக்கி விடுங்கள். எண்ணெயுடன் உருளைக் கிழங்கு வேகும் அளவிற்கு நன்கு அடிப்பிடிக்காமல் வதக்கி விட வேண்டும். நீங்கள் வதக்குவதிலையே மசாலா பொருட்களின் பச்சை வாசனை போய் நன்கு மணமுள்ள உருளைக்கிழங்கு வறுவல் ரெடி ஆகி விடும். அதன் பிறகு கொஞ்சம் கறிவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து மேலே தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி பாருங்கள், அவ்வளவுதான் செம டேஸ்டா இருக்கும்.

உருளைக்கிழங்கு வட்ட வருவல் சூடான சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், கலவை சாதம் என்று எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுத்தால் மதியம் சாப்பிடும் பொழுது உருளைக்கிழங்கின் வாசம் ஆளையே தூக்கும். அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த உருளைக்கிழங்கு வட்ட வறுவல் செய்வதற்கு அதிக நேரம் கூட எடுக்காது, எனவே இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -