ஒருமுறை முள்ளங்கியுடன் இப்படி புதினா, கொத்தமல்லி சேர்த்து செய்து பாருங்கள், இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அற்புதமான சுவையில் இருக்கும்

mullangi-chutney2
- Advertisement -

காலை, மாலை உணவிற்காக புதிய புதிய சைடிஷ்களை செய்ய வேண்டியிருக்கும். சாம்பார் வைத்தாலும் தினமும் சாம்பாரா? என்ற கேள்வியும், சட்னி செய்தாலும் தினமும் சட்னியா? என்ற கேள்வியும் அனைவரது வீட்டிலும் இருக்கின்ற வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால் எவ்வளவு யோசித்தாலும் இதற்கு மாற்றாக என்னதான் செய்ய முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இவ்வாறு சுவையான சட்னி, சாம்பாரையும் விட உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளை வைத்து இட்லி தோசைக்கு சுவையான சைடிஷ்களை செய்ய முடியும். அப்படி முள்ளங்கியை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான உணவினை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

chutni

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – 150 கிராம், பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 5 பல், தக்காளி – 1, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, புதினா – ஒரு கைப்பிடி, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய் – 3 சில்லு, கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் முள்ளங்கியை தோல் சீவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் மூன்று சில்லு தேங்காயை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கியை கடாயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

mullangi-5

பின்னர் மறுபடியும் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு 2 பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளவேண்டும். அதன்பின் இரண்டு காய்ந்த மிளகாய், 5 பல் பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து கொண்டு, நன்றாக வதக்கவேண்டும். பின்னர் ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து வதக்கிக்கொண்டு இவற்றுடன் வதக்கி வைத்துள்ள முள்ளங்கியையும் சேர்த்துக் கொண்டு, நன்றாக கிளறி விடவேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவு புளி மற்றும் துருவி வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு இவற்றை ஆற வைக்க வேண்டும்.

mullangi-chutney1

பின்னர் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த முள்ளங்கி சட்னியுடன் இட்லி, தோசை சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

- Advertisement -