தினமும் ஒரே குழம்பு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? சௌசௌ குருமா மணக்க மணக்க இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்! இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

sow-sow
- Advertisement -

தினமும் ஒரே குழம்பு சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு விதவிதமான குழம்பு வகைகளை ருசிக்க ஆவலாக இருக்கும். எளிதாக செய்யக்கூடிய இந்த சௌசௌ குருமா சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சூப்பராக இருக்கும். கறி குழம்பு போல சுவை மிகுந்த இந்த சௌசௌ குருமா நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்க போகிறது. நீங்களும் இதே முறையில் செய்து அசத்த இதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

chow-chow

சௌசௌ குருமா செய்ய தேவையான பொருள்:
சௌசௌ – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு பற்கள் – 5, பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – 2, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், காஞ்ச மிளகாய் 2, தேங்காய் துண்டுகள் – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சௌசௌ குருமா செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான எல்லா காய்கறிகளையும் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடவும். கடுகு பொரியவும் வெந்தயம் சேர்த்து தாளித்து காஞ்ச மிளகாய் ஒன்று, பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயத்துடன் கருவேப்பிலை, பூண்டு பற்கள், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மைய வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கியதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள சௌசௌவை சேர்த்து லேசாக பிரட்ட வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவிற்கு சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

- Advertisement -

இவற்றின் பச்சை வாசம் போக லேசாக வதங்கியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துண்டுகளாக வெட்டி வைத்துள்ள தேங்காய், காய்ந்த மிளகாய் ஒன்று, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

chow-chow-kulambu

சௌசௌ நன்கு வெந்து வந்ததும் அதில் நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டையும் கலந்து தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு, காரம் சரி பார்த்து நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்து குருமா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட இதே போல தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். நீங்களும் இதை அளவுகளில் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -