மிக்ஸியே தேவையில்லை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள இப்படிக்கூட ருசியாக ‘தக்காளி சட்னி’ செய்யலாம்.

tomato-chutney-recipe
- Advertisement -

பொதுவாக இட்லி, தோசைக்கு எந்த வகையில் தக்காளி சட்னி செய்து கொடுத்தாலும் அது அட்டகாசமாக இருக்கும். மிக்ஸியில் போட்டு அரைக்காமல் ஒரு சுவையான தக்காளி சட்னியை இட்லி, தோசைக்கு ஏதுவாக எப்படி செய்வது? எல்லோருக்குமே இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி செய்து கொடுத்தால் தான் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே இந்த முறையில் நீங்கள் ஒரு முறை தக்காளி சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள்! இதன் சுவையே அலாதியானதாக இருக்கும். ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் அதையே செய்வீர்கள். அப்படியான சுவையுள்ள இந்த தக்காளி சட்னி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தக்காளி

தக்காளி சட்னி செய்ய வேண்டிய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 25, பூண்டு பல் – 10, கருவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – 4, தக்காளி – 5, வெல்லம் – ஒரு துண்டு, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
இந்த முறையில் தக்காளி சட்னி செய்யும் பொழுது நீங்கள் நல்ல கனமான பாத்திரம் அல்லது மண்ச்சட்டி எடுத்து வைத்துக் கொண்டால் இன்னும் சூப்பராக இருக்கும். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் சட்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டு கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் அதில் கொஞ்சமாக பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

road-side-tomato-chutney1

பெருங்காயத் தூள் தக்காளி சட்னியின் சுவையை இன்னும் கூட்டிக் கொடுக்கும். பின்னர் அதில் தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் இல்லாதவர்கள் ரெண்டு பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்ததும் அதில் பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய்களை துண்டு துண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து நன்கு மசிய வதக்க வேண்டும். தக்காளி சேர்க்கும் பொழுது சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கும். அடுப்பை சிம்மில் வைத்து கொஞ்ச நேரம் மூடி வைத்தால் போதும் தக்காளி நன்கு வெந்து குழைய ஆரம்பிக்கும். பின்னர் அதே சூட்டில் கரண்டியை வைத்து நன்கு தக்காளியை மேலும் மசித்து விடுங்கள். மண்சட்டி பயன்படுத்துபவர்கள் மத்து கொண்டு மசித்துக் கொள்ளலாம். புளிப்பும், இனிப்பும் ஆக இருக்க ஒரு துண்டு வெல்லத்தை சேர்த்து கலந்து கொள்வது கூடுதல் சுவையை கொடுக்கும்.

road-side-tomato-chutney

வெல்லம் சேர்த்ததும் தேவையான அளவிற்கு உப்பு போட்டு சட்னிக்கு தேவையான அளவிற்கு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் பத்தே நிமிடத்தில் தக்காளி சட்னி நாம் அரைத்து காட்டி விடலாம். நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து கூடுதலாக இட்லி, தோசையை உங்கள் குடும்பத்தினர் சாப்பிடுமாறு செய்து அசத்தி விடுங்கள்.

- Advertisement -