இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட எளிமையாக செய்யக்கூடிய இந்த சுவையான சட்னியை ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள்

tomato
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றுடன் தொட்டுக்கொள்ள சுவையான தேங்காய் சட்னி செய்து வைத்திருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் கேட்பது தக்காளி சட்னி இல்லையா? என்று தான். அதேபோல் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றாலும் அங்கும் நாம் தொட்டுக்கொள்ள தக்காளி சட்னியை தான் விருப்பமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பபோம். இவ்வாறு அனைவருக்குமே பிடித்த தக்காளி சட்னியை எப்படி எளிமையாக சுவையாக செய்வது என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

road-side-tomato-chutney1

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 4, காய்ந்த மிளகாய் – 6, கடலைப்பருப்பு – 4 ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், வெள்ளை எள் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, புதினா – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை நன்றாக கழுவி 4 துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பூண்டினை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். புதினா கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இவற்றை நன்றாக தண்ணீரில் அலசி கொண்டு கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.

tomato

அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நான்கு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 6 காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்க வேண்டும். அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

onion

வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டிற்கு மாற்றி அவை நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். எப்பொழுதும் இவ்வாறான சட்னியை பேஸ்ட் பதத்திற்கு அரைக்க கூடாது. அப்படி பேஸ்ட் பதத்திற்கு அரைத்தால் அவற்றின் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது. சற்று கொரகொரப்பாக அரைத்தால் மட்டுமே இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் வடை, பொங்கல், பூரி இவற்றுடன் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

Idli

இவ்வளவு சுலபமான சுவையான தக்காளி சட்னியை நீங்களும் உங்கள் வீட்டில் இதே முறையை பின்பற்றி ஒரு முறை செய்து பாருங்கள். எவ்வளவு சுவையாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இட்லி, பூரி, சப்பாத்தி, பொங்கல், வடை இவ்வாறு எந்த வித உணவை சமைத்தாக இருந்தாலும் அவற்றுடன் தொட்டுக்கொள்ள சற்றும் யோசிக்காமல் இந்த தக்காளி சட்னியை உடனே செய்து விடுங்கள். நீங்கள் எவ்வளவு உணவுகள் சமைத்து வைத்தாலும் அவை அனைத்தும் சட்டென்று காலியாகி விடும்.

- Advertisement -