அடை தோசைக்கு ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை சட்னி இப்படி செஞ்சு பாருங்க, 2 நிமிஷம் கூட ஆகாது! அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.

white-coconut-chutney
- Advertisement -

ஹோட்டலில் கொடுக்கும் வெள்ளை சட்னிக்கு ரகசியம் என்ன? என்று பலரும் புரியாமல் யோசிப்பது உண்டு. அதிக காரம் இல்லாமல், இனிப்பு தன்மையுடன், நிறம் மாறாமல் இருக்கும் இந்த சுவையான ஹோட்டல் வெள்ளை தேங்காய் சட்னி காரசாரமான அடை தோசைக்கு சூப்பராக இருக்கும். அடை தோசை மட்டுமல்லாமல் இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். இத்தகு வெள்ளை தேங்காய் சட்னி எப்படி நாமும் எளிதாக அரைப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

coconut1

வெள்ளை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, சின்ன வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, முந்திரி பருப்பு – 10, சர்க்கரை – அரை ஸ்பூன், இஞ்சி துண்டு – ஒரு இன்ச், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.

- Advertisement -

வெள்ளை சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அரை மூடி அளவிற்கு தேங்காயை பத்தைகளாக போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காயின் பின்பகுதியில் கருப்பாக இருக்கும் தோல் பகுதியை சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அல்லது அரை மூடி தேங்காயைத் துருவியில் வைத்து பூப்போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். கருப்பு நிற பகுதி இருக்கும் பொழுது சட்னி வெள்ளையாக வருவதில்லை. அதனால் அதனை நீக்கி விட வேண்டும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

coconut-chutney0

பின்னர் இதனுடன் 2 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேருங்கள். அதிகம் சேர்த்தால் வெங்காயத்தின் பச்சை வாசம் அடிக்கும். காரத்திற்கு 2 பச்சை மிளகாயை மீடியம் சைஸில் காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக தேங்காய் சட்னிக்கு உடைத்த கடலை அல்லது வேர்க்கடலை போன்றவற்றை சேர்ப்பது உண்டு. ஆனால் அதற்கு பதிலாக முந்திரிப் பருப்பை சேர்த்து பாருங்கள், ரொம்பவே சுவையாக இருக்கும். முந்திரிப்பருப்பு இல்லாதவர்கள் 3 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, 3 டேபிள்ஸ்பூன் உடைத்த கடலை சேர்த்துக் கொள்ளுங்கள், இதுவும் சூப்பராக இருக்கும்.

- Advertisement -

ஹோட்டலில் செய்யும் தேங்காய் சட்னியில் கொஞ்சம் இனிப்பு தன்மை இருக்கும். அதற்கு அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ஆப்ஷனல் தான் விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடலாம். ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியைத் தோல் சீவி சேர்த்துக் கொள்ளுங்கள், அதிகம் சேர்த்தால் இஞ்சி வாடை அடிக்கும். பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியதுதான்.

coconut-chutney

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து வறுக்க வேண்டும். ஒரே ஒரு காய்ந்த மிளகாயை காம்பு நீக்கி கிள்ளாமல் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள், இது வாசனைக்கு தான் சேர்க்கப்படுகிறது. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேருங்கள். அவ்வளவுதாங்க இந்த தாளிப்பு முடிந்ததும் சட்னியுடன் கொட்டி சுடச்சுட அடை தோசையுடன் பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -