வீட்டில் செய்யும் பஜ்ஜி கடையில் விற்பதுபோல் மொறுமொறுவென்று சுவையாக வர, இந்த ஒரு பொருளை சேர்த்தால் மட்டும் போதும்

bajji
- Advertisement -

வீட்டில் போர் அடிக்கிறது என்றால் உடனே சாப்பிட ஏதேனும் வேண்டும் என்று கேட்பார்கள். அப்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்ட உடனே செய்வதற்கு மிகவும் ஈஸியான உணவு என்றால் அது பஜ்ஜி, போண்டா மட்டும் தான். இந்த உணவை தான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் டீக்கடையில் செய்யும் அதே ருசியில் பஜ்ஜி, போண்டா செய்து கொடுத்தால் போதும், அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதேனும் ஒரு சட்னி இருந்தால் மட்டும் போதும், இன்னும் ருசியாக சாப்பிட்டு மகிழ்வார்கள். ஆனால் வீட்டில் செய்யும் பஜ்ஜி கடையில் விற்பது போல் மொறு மொறுவென்று இல்லாமல் கொஞ்சம் வதக் வதக்கென்று இருக்கும். எனவே பலரும் அதிகமாக சாப்பிடாமல் அதனை வைத்து விடுவார்கள். அப்படி கடையில் இருப்பது போல் வீட்டிலேயும் செய்ய இந்த எளிய குறிப்பை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். வாருங்கள் இந்த மொறுமொறு பஜ்ஜியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2, கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, வர மிளகாய் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், இட்லி மாவு – ஒரு குழிக்கரண்டி.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு வாழைக்காய்களை தோல் சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாழைக்காய்களை இரண்டு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும். அதன் பிறகு பஜ்ஜி போடுவதற்கு ஏற்றார் போல் மெல்லிய துண்டுகளாக கத்தி பயன்படுத்திக் நறுக்கி கொள்ளலாம். அல்லது காய் சீவல் வைத்து சீவி கொள்ளலாம்.

பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 150 கிராம் கடலை மாவை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் உப்பு, அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் லேசாக தண்ணீர் கலந்து மாவை அரைக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது வீட்டில் அரைத்து வைத்துள்ள இட்லி மாவில் இருந்து ஒரு குழிக்கரண்டி மாவை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பஜ்ஜி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

கடாய் நன்றாக சூடானதும் அதில் கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒவ்வொரு துண்டு வாழைக்காயாக எடுத்து, அதனை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் சேர்த்து பொரிக்கக்க வேண்டும். அப்பொழுது பஜ்ஜி நன்றாக உப்பி சிவந்து வர ஆரம்பிக்கும். உடனே பஜ்ஜியை வெளியே எடுத்து, அதனுடன் சிறிதளவு சட்னி சேர்த்து பரிமாறி கொடுக்க, மொறுமொறுவென மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -