கோவிலில், மற்றவர்கள் ஏற்றிய தீபச்சுடரில் இருந்து, நம்முடைய வேண்டுதலுக்காக தீபத்தை ஏற்றி வைத்தால், நமக்கான வேண்டுதல் பலிக்காது? தீராத கஷ்டம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்?

temple
- Advertisement -

கோவிலுக்கு சென்று தீப வழிபாடு செய்வதில், இன்னும் சிலருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றது. அந்த வரிசையில் கோவிலுக்கு சென்று நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது, வேறு ஒருவர் ஏற்றிய தீபத்தில் இருந்து, நம்முடைய தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாமா என்ற கேள்விக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும், இப்படி செய்யலாமா? அப்படி செய்யலாமா? என்ற சந்தேகத்தோடு செய்தால் அதன் மூலம் கிடைக்கும் பலன் நம்மை வந்து முழுமையாக அடையாது. நம்முடைய வழிபாட்டை எப்படி செய்தாலும் அந்த இறைவன் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார். வழிபாட்டு முறைகளை விட, உங்களுடைய மனதில் நம்பிக்கை எந்த அளவுக்கு ஆழமாக இருக்கின்றது என்பதை தான் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

vilakku-deepam

சரி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எல்லோர் கையிலும் தீபத்தை ஏற்றுவதற்காக தீப்பெட்டி என்ற ஒன்று கிடையாது. கோவில்களில் பெரிய பந்தம் அல்லது பெரிய தீபத்தை ஏற்றி வைத்திருப்பார்கள். அதிலிருந்து நெருப்பை பொருத்தி தான் எல்லோரும் தங்களுடைய வேண்டுதல்களுக்கான தீபத்தை ஏற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

இப்படி இருக்கும்போது அடுத்தவர்கள் ஏற்றிய தீபத்தில் நாம் தீபம் ஏற்றி வைத்தால், அவர்களுடைய கஷ்டம் நம்மிடம் ஒட்டிக் கொள்ளுமோ, என்ற பயம் தேவையில்லை. சில பேர் சொல்லுவார்கள்! அப்படி அடுத்தவர்கள் கஷ்டத்திற்காக ஏற்றிய தீபத்திலிருந்து, நம்முடைய தீபத்தை பற்ற வைக்கக் கூடாது என்று! அப்படி ஏற்றினால் அவர்களுடைய கெடுபலன் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும் என்று!

sivan-deepam

சந்தேகமே இல்லாமல், மன உறுத்தல் இல்லாமல், முழு திருப்தியோடு கோவிலில் ஏற்றக்கூடிய தீபம் அனைத்தும், இறைவனுக்கே சமர்ப்பணம் என்ற எண்ணத்தோடு அடுத்தவர்கள் ஏற்றிய தீபத்தில் நம்முடைய தீபத்தை ஏற்றி வழிபட்டால் நமக்கு எந்த கெடுதலும் ஏற்படாது என்பதுதான் உண்மை.

- Advertisement -

உங்களுக்கு மனதில் சிறியதாக ஏதேனும் உறுத்தல் இருந்தால் கூட, உங்களுடைய தீப்பெட்டியை கொண்டு போய் உங்களுடைய தீபத்தை ஏற்றி வையுங்கள். உங்களுக்காக உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தனியாக மணல் விளக்கில் தீபத்தை ஏற்றுவதை விட, கோவிலில் அணையாமல் ஒவ்வொரு சன்னிதானத்திற்கு முன்பாகவும் ஒரு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபத்தை ஒளிர விட்டிருப்பார்கள்.

temple-vilakku

அந்த தீபம் அணையாமல் இருப்பதற்கு, சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய்யை அந்த அகண்ட தீபத்தில் ஊற்றுவது மேலும் சிறப்பினை தேடித்தரும். ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, நம்முடைய கஷ்டங்கள் மட்டும் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வதைக் காட்டிலும், முன்னதாகவே கோயில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபம் அணையாமல் இருப்பதற்காக அந்த இறைவனுக்காக, எண்ணெயை ஊற்றுவது நமக்கு கோடானகோடி பலனை அள்ளி தரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

நம்பிக்கையோடு வெறும் தண்ணீரில் தீபம் ஏற்றினாலும் அது நிச்சயமாக ஒளிரும். அந்த தீபத்தை, அந்த ஆண்டவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வார். இதற்கு எடுத்துக்காட்டாக நமி நந்தி நாயனார் தண்ணீரில் தீபமேற்றி மோட்சம் அடைந்ததாக வரலாறு சொல்கின்றது. கணம்புல் நாயனார் திருக்கோவிலில் தீபம் ஒளிர வேண்டும் என்பதற்காக தன்னுடைய தலைமுடியில் தீபமேற்றி மோட்சத்தை அடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. கலிய நாயனார் தீப வழிபாட்டிற்காக தன்னுடைய ரத்தத்தையே எண்ணெயாக ஊற்றி, தீபம் ஏற்றினார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவர்களுடைய வரிசையில் நாம் வெறும் நல்லெண்ணெய் ஊற்றி நம்பிக்கையோடு தீபம் ஏற்றி வரும் பட்சத்தில் நமக்கான மோட்சமும் நிச்சயம் கிட்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெண்கள் இந்த ஒரு தர்மத்தை செய்தாலே போதும். குடும்பமே அதன் மூலம் சிறந்த பலனை பெரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -