கோடீஸ்வர யோகம் பெற 3 நட்சத்திரக்காரர்கள் செய்யவேண்டியது இது தான்

astrology

ஒரு மனிதனின் வாழ்க்கையை அவன் பிறந்த நேரம் தீர்மானிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு மனிதன் பிறக்கையில் நவகர்கங்களும், 27 நட்சத்திரங்களும், லக்கினமும் எந்த நிலையில் உள்ளதோ அதற்கேற்ப அவனது வாழ்வில் இன்ப துன்பங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் அடங்கியுள்ளது. ஒரு மனிதனுக்குண்டான அனைத்தும் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கடவுள் நினைத்தால் அவன் தலை எழுத்தையே மாற்ற முடியும். அந்த வகையில் கீழே குறிப்பிட்டுள்ள மூன்று நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் எந்த கோயிலிற்கு சென்றால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

astrology

அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் செல்லவேண்டிய ஆலையம்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி என்னும் ஊரில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவில், அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் வழிபட உகந்த கோவிலாகும். இந்த கோவிலில் மூலவரான பிறவி மருதீஸ்வரரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் சிறப்பான ஒரு முன்னேற்றம் இருக்கும், நீண்ட நாள் தடைபட்ட திருமணம் கை கூடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், பண வரவு அதிகரிக்கும்.

அஸ்வினி நட்சத்திர தேவதைகள் தினம் தோறும் வழிபட கூடிய ஒரு சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில். அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஆனால் தாங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து சனீஸ்வர பகவானையும் செவ்வாய் பகவானையும் வழிபட்டு செல்வதன் மூலம் நோயற்ற வாழ்வை பெறலாம். அதோடு இங்கு சனீஸ்வர பகவானையும், செய்வாய் பகவானையும் ஹோமம் வளர்த்து வழிபடுவதன் மூலம் மிகிழ்ச்சியான வாழ்வை பெறலாம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இங்குள்ள சிவனை வழிபடுவதன் மூலம் எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். மனதில் உள்ள அச்சம் நீங்கும்.

இந்த கோவிலின் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். நவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற விஷேஷ நாட்களில் இங்கு விஷஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அதில் நாம் கலந்துகொள்வது நல்லது.

ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் செல்லவேண்டிய ஆலையம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருந்துதேவன்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள கற்கடேஸ்வரர் கோவில், இதுவே ஆயில்யம் நத்திரத்தை சேர்ந்தவர்கள் வழிபட உகந்த கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் சொத்து பிரச்சனைகள் தீரும், தொழிலில் லாபம் அதிகரிக்கும், நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும், வாழ்வில் இருந்து வந்த தடங்கல் நீங்கும். இங்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து அதை அருந்துவதன் மூலம் அனைத்து விதமான கிரக தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

astrology

தேவார பாடல் பெற்ற தலமான இந்த கோவிலின் மூலவர் சுயம் மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு சுவாமியின் சிலையில் இந்திரனால் வெட்டப்பட்ட்ட தளும்பு உள்ளது. அதே போல நண்டு ஐக்கியமான துளையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திர நாட்களில் இங்கு வந்து வழிபடுவது நல்லது. இதன் மூலம் தங்களது உடம்பில் உள்ள அனைத்து விதமான பிணிகளும் நீங்கும். வாழ்வில் வளம் பெருகும்.

இந்த கோவிலின் நடை காலை 9 மணி முதல் பகல் 1.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது.

அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் செல்லவேண்டிய ஆலையம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருநின்றியூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது மகாலட்சுமிபுரீஸ்வரர் கோவில். அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் வழிபடுவதற்கு இது உகந்த கோவிலாகும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் இங்கு சென்று வழிபடுவதன் மூலம் உடல் ஆரோகம் மேம்படும், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் விலகும், இல்லற வாழ்வு சிறக்கும், தொழில் லாபகரமாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்.

astrology

தேவார பாடல் பெற்ற தலமான இந்த கோவிலில் இறைவன் சுயம்பு லிங்கமாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இங்குள்ள செல்வ கணபதிக்கு அனுஷம் நட்சத்திர நாளில் விஷேஷ பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜையில் அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்வது நல்லது. அதன் மூலம் நீண்ட நாட்கள் இருந்து வந்த கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
அனுமனின் பாதச்சுவடுகள் இன்றும் அழியாமல் உள்ள சில இடங்கள் பற்றி தெரியுமா ?

இந்த கோவிலின் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கிறது. இங்குள்ள சிவ பெருமானின் லிங்கத்தில் கோடரியால் வெட்டப்பட்ட தழும்பு ஒன்று உள்ளது. அதற்கு பின் புராண காலத்து கதை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்: