தினமும் இரவில் கரடிகள் வந்து வழிபடும் அதிசய கோவில் பற்றி தெரியுமா ?

sandi matha temple

ஆன்மிக பூமியான நம் நாட்டில் இறைவனின் அருளால் நிகழும் அதிசியங்களுக்கு பஞ்சமில்லை. நம் நாட்டு பூர்வீக கதைகள், இதிகாசங்கள், புராணங்களில் இப்படிப்பட்ட அதிசய நிகழ்வுகளைக் கூறும் சம்பவங்கள் பல உள்ளன. அப்படியான கதைகளில் மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் இறைவனை பக்தியுடன் வழிபட்டு முக்தி அடைந்ததை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அப்படி விலங்குகள் வழிபட்டு முக்தி அடைந்த கோவில்கள் நம் நாட்டில் பல உண்டு. அப்படியான ஒருக் கோவிலைப் பற்றி இங்கு காணலாம்.

matha emple

இராமாயணத்தில் “ஸ்ரீராமருக்கும்” அவரது வானர சேனைகளுக்கும், ராவணனுடனான போரில் உறுதுணையாக இருந்தவர் “ஜாம்பவான்”. இவர் கரடியின் உருவம் கொண்டவர். அந்த ஜாம்பவானின் அம்சமான கரடிகள் இரண்டு தினமும் ஒரு கோவிலுக்கு பூஜை வேளையின் வருவதாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒருக் காட்டுப்பகுதிக்கு அருகிலிருக்கும் கோவில் தான் “சாண்டி மாதாக் கோவில்” சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலின் சாயங்காலப் பூஜையின் போது அருகிலிருந்த காட்டிலிருந்து கரடி ஒன்று இக்கோவிலுக்குள் வந்ததாக இக்கோவிலின் பூசாரி கூறுகிறார். சில காலத்திற்குப்பின் மற்றொரு கரடியும் இக்கரடியுடன் இணைந்து வந்ததாகவும், அன்றிலிருந்து இன்று வரை இக்கரடிகள் மாலைநேரப் பூஜையின் போது வழக்கமாக வருவதாகவும் இக்கோவிலின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

sandi matha

கரடிகள் மிகுந்த பலமும் மூர்கத்தனமும் கொண்ட விலங்குகள் ஆகும். ஆனால் இக்கோவிலுக்கு வரும் கரடிகளால் இக்கோவிலிலுள்ளவர்களுக்கோ, இங்கு வரும் பக்தர்களுக்கோ எவ்வித தீங்கும் ஏற்பட்டதில்லை என்று இங்கு வழக்கமாக வரும் மக்கள் கூறுகிறார்கள்.