டென்ஷனை குறைக்க பரிகாரம்

sad
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி டென்ஷன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை வாழவே முடிவதில்லை. ஏன், இந்த டென்ஷன் குழந்தைகளை கூட விட்டு வைக்க மாட்டேங்குது. தினமும் ஏதோ ஒரு பதட்டத்தோடு தான் வாழ்க்கையில் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பதட்டம் நமக்கு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணி விடுகிறது.

ஒவ்வொரு நோயாக உடம்புக்குள் வருவதற்கு காரணம் இந்த டென்ஷன் தான். தினமும் டென்ஷன் இல்லாமல் வாழ வேண்டும். என்ன செய்வது. ஆன்மீக ரீதியாக ஒரு எளிய பரிகாரம் உள்ளது. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த தண்ணீரால் முகத்தை கழுவிக்கொண்டு தூங்குங்கள் டென்ஷன் இல்லாமல் நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். அடுத்த நாள் காலையும் உங்களுக்கு டென்ஷன் இல்லாமல் நல்ல பொழுதாக விடியும்.

- Advertisement -

டென்ஷன் இல்லாமல் இரவு நிம்மதியாக தூங்கி எழுந்தாலே போதும். அடுத்த நாள் காலை மன அழுத்தம் இல்லாமல் உங்களுடைய வேலையை தொடங்கலாம். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கும் அந்த குறிப்பிட்ட ஒரு பிரச்சனையை சரி செய்யவும் இந்த பரிகாரம் உதவி செய்யும். வாங்க அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

டென்ஷன் குறைய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவையான பொருள் ஒரு கண்ணாடி டம்ளர். அது நிரம்ப கொஞ்சம் நல்ல தண்ணீர் தேவை. குடிக்கின்ற தண்ணீராக பயன்படுத்துவும். இதில் 1 ஸ்பூன் அளவு கல் உப்பு போட்டு, நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கண்ணாடி டம்ளரை உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வாழ்க்கையில் டென்ஷனை கொடுக்கக் கூடிய பிரச்சனை எது. முதலில் இருக்கக் கூடிய பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். டென்ஷன் தரக்கூடிய பிரச்சனை நிறைய இருக்கும். ஒவ்வொன்றாக சரி செய்வோம். முதலில் உங்களுக்கு தலை பாரத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த பிரச்சனை என்ன. அது சரியாக வேண்டுதல் வைக்கவும்.

உதாரணத்திற்கு வேலையில் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட நபர் உங்களை வேலையில் இருந்து தூக்கியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றார். அவரை சமாளிக்கணும் என்ன செய்வது. இந்த தயார் செய்து வைத்திருக்கும் கண்ணாடி டம்ளரை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். வேலையில் இருக்கும் பிரச்சனை சரியாக வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு உங்கள் முகம் கை கால்களை கழுவிக் கொள்ளவும். ஒரு பெரிய ஜக்கில் முகம் கழுவ சாதாரண தண்ணீரை எடுத்துக்கொண்டு, அந்தத் தண்ணீரில் இந்த உப்பு தண்ணீரை கலந்தும் முகம் கை கால்களை நீங்கள் கழுவிக் கொள்ளலாம். தவறு கிடையாது.

இப்படி இந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு, துடைத்துக் கொண்டு இரவு தூங்க செல்லவும். தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்து விட்டு வேறு எந்த வேலையை செய்யக்கூடாது. நேரடியாக படுக்கைக்கு தூங்கச் செல்லுங்கள். நிம்மதியான தூக்கம் வரும். அந்த டென்ஷன் உங்களுடைய மனதைப் போட்டு குழப்பாது. மறுநாள் காலை எழுந்து வேலைக்கு போங்க. எப்பவும் போல. வேலையில் உங்களுக்கு இருந்த பிரச்சனை ஏதோ ஒரு வகையில் சரியாவதற்கு உண்டான வழிகள் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை ஒரே ஒரு நாள் செய்தால் போதுமா. கூடாது நீங்கள் வைத்த கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை செய்ய வேண்டும். தொடர்ந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இதே பரிகாரத்தை, அந்த ஒரு வேண்டுதலை வைத்தே செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் வேலையில் இருக்கும் அந்த பிரச்சனை முழுசாக ஒரு சில நாட்களில் சரியாகும்.

இதையும் படிக்கலாமே: தை அமாவாசையில் சுக்கிர அனுகிரகத்தை பெற வழிபாடு

இது ஒரு உதாரணத்திற்காக தான் உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் சரி, பண பிரச்சனை, கடன் சுமை, பேங்கில் கடன் வாங்கணும், கடனை திருப்பிக் கொடுக்கணும், நகையை மீட்கணும், குழந்தைகளுக்கு திருமணம் நடக்கணும், தொழிலில் எதிரி விலக, தொழிலில் முன்னேற, கணவன் மனைவி சண்டை தீர, மாணவர்கள் மேல் படிப்பு படிக்க, நினைத்த காலேஜில் சீட்டு வாங்க, இப்படி எந்த பிரச்சனை டென்ஷன் உங்கள் மனதில் இருந்தாலும் அதை சரி செய்ய இந்த எளிமையான பரிகாரம் போதும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -