தடைகளையும் துன்பங்களையும் நீக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு.

durgai amman
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பங்கள் என்பது ஏற்படத்தான் செய்யும். அதே சமயம் தான் நினைத்த காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது அதில் தடைகளும் தடங்கல்களும் ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்படக்கூடிய தடைகளையும் தடங்கல்களையும் துன்பங்களையும் விளக்குவதற்கு நமக்கு உதவக்கூடிய தெய்வமாக துர்க்கை அம்மன் விளக்குகிறார். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் துர்க்கை அம்மனை எவ்வாறு வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்களும் துயரங்களும் நீங்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

அனைத்து ஆலயங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தாயாக தான் துர்க்கை அம்மன் விளக்குகிறார். வனதுர்க்கை விஷ்ணு துர்க்கை என்று பல துர்க்கை அம்மன் வடிவங்கள் இருக்கின்றன. எந்த துர்க்கை அம்மனாக இருந்தாலும் அந்த அம்மனை நாம் வழிபட்டோம் என்றால் அந்த தாய் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்களையும் துயரங்களையும் நீக்குவார்கள்.

- Advertisement -

அதனால் தான் பலரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தின் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இப்பொழுது நம் வீட்டிலேயே எந்த முறையில் எப்படி வழிபட்டால் துர்க்கை அம்மனின் அருளை பெறலாம் என்று பார்ப்போம்.

இந்த வழிபாட்டை நாம் வெள்ளிக்கிழமை அன்று செய்யலாம் அல்லது பௌர்ணமி நாளிலும் செய்யலாம். வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டையும் சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் துர்க்கை அம்மனின் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமம் இடவேண்டும். பிறகு துர்க்கை அம்மனுக்கு மல்லிகைப்பூ அல்லது சம்பங்கி பூ இவை இரண்டில் ஏதாவது ஒரு மலரை சூட்ட வேண்டும். அடுத்ததாக ஒரு சிறிய தட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கஸ்தூரி மஞ்சள் தூளை போட வேண்டும். பிறகு இரண்டு வெற்றிலைகளை எடுத்து கசக்கி அதிலிருந்து சாறெடுத்து அதை இந்த கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து நெற்றியில் வைத்துக் கொள்வது போல் குளைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மஞ்சளை துர்க்கை அம்மனின் புகைப்படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். பிறகு துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து “ஓம் துர்க்கை அம்மனே சரணம்” என்னும் மந்திரத்தை 108 முறை மனதார உச்சரிக்க வேண்டும். இவ்வாறு நாம் உச்சரித்தோம் என்றால் நாம் துர்க்கை அம்மனிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்று அர்த்தம். யார் ஒருவர் சரணாகதி அடைகிறார்களோ அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் எந்தவித துன்ப துயரங்களும் ஏற்படாமல் காப்பாற்றுவாள். சரணாகதி என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இவ்வாறு நாம் மந்திரத்தை கூறிவிட்டு இந்த மஞ்சளை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் துன்பங்களையும் தடைகளையும் தடங்கல்களையும் துர்க்கை அம்மன் விரட்டி அடித்து விடுவார் என்பது தான் நிதர்சனமான உண்மை. பௌர்ணமி அன்று இந்த பூஜையை செய்வதாக இருந்தால் தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் இந்த பூஜையை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தங்கம் தங்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டியது

இப்படி செய்தால் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களும் தீர்ந்து அதையும் மீறி துன்பங்கள் வந்தால் அதை தைரியமாக எதிர் கொள்ளக்கூடிய மன தைரியத்தையும் துர்க்கை அம்மன் நமக்கு அருள்வார்.

- Advertisement -