நாளை தை அமாவாசையில், திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நல்ல நேரம்

- Advertisement -

நாளை தை அமாவாசை. மற்ற அமாவாசை தினத்தில் முன்னோர்களது வழிபாட்டை தவறவிட்டவர்களும், இந்த தை அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டை செய்யும் போது, திதி தர்ப்பணம் கொடுக்கும் போது, தவறவிட்ட அமாவாசை திதியில், முன்னோர்கள் வழிபாடு செய்த பலனை சேர்த்து பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை இதெல்லாம் சிறப்பு வாய்ந்த அமாவாசை திதிகள்.

நாளை தை அமாவாசை திதி பிறக்கக்கூடிய நேரம் என்ன, எந்த நேரத்தில் திதி தர்ப்பணம் கொடுக்கணும், முன்னோர்களுக்கு படையல் எந்த நேரத்தில் போடணும், நாளைய தினம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற, முன்னோர்களின் சாபம் விலக, தலைக்கு குளிக்கும் தண்ணீரில் எந்த பொருளை போடுவது, இந்த கேள்விகளுக்கு உண்டான பதிலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

தை அமாவாசை தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்

நாளை 9.2.2024 ஆம் தேதி காலை 8:05 மணிக்கு அமாவாசை திதி பிறக்கவிருக்கின்றது. ஆகவே நாளைய தினம் காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் திதி தர்ப்பண காரியங்களை செய்வது சிறப்பான நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை இந்த நேரத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வீட்டில் மதியம் 12:00 மணிக்கு, மறைந்த முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் போட்டு முன்னோர்களுக்கு வழிபாடு செய்யலாம்.

நாளைய தினம் கட்டாயம் எல்லோரும் முன்னோர்களது வழிபாட்டை செய்ய வேண்டும். தவறவே விடக்கூடாது. இந்த முன்னோர்கள் வழிபாட்டை செய்வதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கும் பித்ரு தோஷம் விலகும். சுப காரியத்தடை நீங்கும் முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் பல ஜென்மங்களாக நம்மை பின் தொடரும் சாபங்கள் விலகும் என்பதும் ஆன்மீகத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து உங்களால் முடிந்த அன்னதானத்தை யாராவது ஒருவருக்கேனும் செய்யுங்கள். அது உங்களுடைய அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு பல கோடி புண்ணியத்தை தேடி தரும்.

- Advertisement -

இதே போல அமாவாசை தினத்தன்று காலையில் எழுந்து எல்லோரும் கட்டாயமாக நீராடுவார்கள். தினமும் குளிக்காதவர்கள் கூட, நாளை தினம் எழுந்து முதலில் குளித்துவிட்டு தான் அவர்களுடைய அன்றாட வேலையை தொடங்குவார்கள். இந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அது நமக்கு பல மடங்கு பலனைத் தேடித் தரும் வகையில் அமையும்.

அந்த வரிசையில் நாளை உங்களை பிடித்த ஆட்டி படைக்கும் தோஷங்கள் விலக, உங்களை பின்தொடரும் சாபங்கள் விலக, பித்ரு சாபம் நீங்க வேண்டும் என்றால், நாளைக்கு நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இரண்டு ‘துளசி இலைகளை’ கிள்ளி போடுங்கள். துளசி இலை சேர்த்த தண்ணீரில் நாளை தலைக்கு குளிக்கும் போது உங்களை நீங்களே கிளன்சிங் செய்து கொள்ளலாம். அதாவது சுத்தப்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். சோப்பு போட்டு குளிக்கும் சுத்தமல்ல இது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக தை அமாவாசை பரிகாரம்

கண்ணுக்குத் தெரியாத நம்மை பிடித்திருக்கும் கஷ்டங்களை சுத்தம் செய்யக்கூடிய வேலையை இந்த துளசி இலையானது பார்த்துக் கொள்ளும். நாளை வெள்ளிக்கிழமையோடு அமாவாசை தினம் வந்திருப்பதால் மகாலட்சுமிக்கு உரிய இந்த துளசி இலையை போட்டு குளிப்பதன் மூலம் நீங்கள் அபரிவிதமான பலனை அடைவீர்கள். உங்களை பிடித்த பீடை எல்லாம் அன்றோடு நீங்கிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -