தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்வதால் உங்கள் துன்பங்கள் தீர்ந்து, நிம்மதி பெருகும். பணவரவு அதிகரிக்கும்.

poojai
- Advertisement -

தை மாதம் என்றாலே சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மாதத்தில் தான் பலரும் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பல காரியங்களை துவங்குகின்றனர். இந்த மாதத்தில் துவங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியில் தான் முடியும். எனவே தான் கடை திறப்பு விழாவாக இருந்தாலும், புதுவித வியாபாரம் துவங்குவதாக இருந்தாலும், அதனை தை மாதத்தில் பலரும் செய்வதுண்டு. அதுபோல பல திருமணங்கள் தை மாதத்தில்தான் நிச்சயிக்கப்பட்டு, திருமணமும் நடத்தப்படுகிறது. தை மாதத்தில் தான் அறுவடையும் செய்யப்படுகிறது. இவ்வாறு பல விசேஷங்கள் நிறைந்த இந்த தை மாதத்தின் வெள்ளிக்கிழமை ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்த தினங்களாகும். அதன்படி நாளை வருகின்ற வெள்ளிக்கிழமை தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையாகும். எனவே இந்த கிழமையில் செய்யப்படும் சிறப்பு பூஜைக்கு சக்தி வாய்ந்த பலன் இருக்கிறது. எனவே தவறாமல் இந்த பூஜையை நீங்களும் செய்து பலன் பெறுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வெள்ளிக்கிழமை என்றாலே மங்கள தினமாகும். இந்த நாளில் மங்களகரமான பொருட்களை வாங்கி வைப்பதும் மிகவும் சிறப்பு மிக்க செயலாகும். அதனால் நாளைய தினத்தில் உப்பு, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். அது போல காலை மகாலட்சுமி பூஜை அல்லது விளக்கு பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

- Advertisement -

இவ்வாறு இந்த சிறப்பு பூஜை செய்ய முடியாதவர்கள் 108 முறை குங்கும அர்ச்சனை செய்து, அம்மனை வணங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் செவ்வரளி பூவினை மாலையாக தொடுத்துக் கொண்டு, அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு சாற்றுவதும், முடியாவிட்டால் வீட்டில் உள்ள அம்மனுக்கு அணிவிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்த செயலாகும்.

எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை காலை பூஜைக்கு தேவையான அனைத்து அலங்காரங்களையும் செய்து முடித்து, வீட்டை சுத்தமாக துடைத்து வைக்க வேண்டும். பின்னர் பூஜை பொருட்களுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, மலர் சூட்டி வைக்க வேண்டும். பிறகு ஒரு விரல் மஞ்சள், பச்சை கற்பூரம் ஒன்று, ஏலக்காய் ஒன்று, சிறிதளவு வேப்பிலைக் கொத்து மற்றும் 11 ரூபாய் காசுகளையும் பூஜை அறையின் முன் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு விளக்கில் டைமண் கற்கண்டை சிறிதளவு சேர்த்து, தீபம் ஏற்றி அம்மனை மனதார வணங்கி கொள்ள வேண்டும். இத்துடன் எனது கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து எனது வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டும். எனது தொழில் மற்றும் வேலை சிறப்புடன் நடைபெற்று வருமானத்திற்கு எந்தவித தடையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை நேரத்தில் செய்ய வேண்டும். காலை ஆறிலிருந்து ஏழு, மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு எட்டிலிருந்து ஒன்பது. பிறகு பூஜை அறையின் முன் வைத்துள்ள அந்த ஐந்து பொருட்களையும் ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து, மூட்டையாக கட்டிக்கொண்டு, அதனை பணம் வைக்கும் டப்பா அல்லது நகை வைக்கும் டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -